விமானப்படையின் முன்னாள் தளபதியான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக் (MiG) ரக போர் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ஒஃப் த எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகிய இருவரும் குறித்த கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பெறப்பட்ட அழைப்புக்கு அமைய பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










