Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு; தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்க அனுமதியில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

07/10/2026 Leave a Comment

உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும், அதனை அரசு தடுக்கவில்லை எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் செயற்பட்ட ஏழு துணை ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றிடமிருந்து இராணுவத்தினரால் மொத்தம் 801 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில், ஈ.பி.டி.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட 30 ஆயுதங்கள், டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுக்களின் தலைவர்களும் பெரும்பாலான உறுப்பினர்களும் தற்போது அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள போதிலும், தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது தொடர்பில் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்குவதும், அது தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும் எனவும், வடக்கில் திலீபனின் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

பசில் ராஜபக்சவின் ‘பிரவுன்ஸ் ஹில்’ காணியின் பயன்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

07/10/2026 Leave a Comment

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மாத்தறையில் அமைந்துள்ள ‘பிரவுன்ஸ் ஹில்’ காணியின் பயன்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மாத்தறை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவைப் பெற்றுள்ளதாகவும், குறித்த காணி தொடர்பில் உரிமை கோருவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – முதலாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

07/10/2026 Leave a Comment

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

Filed Under: செய்திகள்

10 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு – ஷிரந்தி ராஜபக்ச கைது!

07/10/2026 Leave a Comment

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (7) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிருலப்பனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரந்தியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்த நிலையில், இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயற்பாடு பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளை மீறும் குற்றமாகக் கருதப்படுவதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Filed Under: செய்திகள்

நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!

06/10/2026 Leave a Comment

‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் அக் கம்பனியின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 13ஆம் திகதி எஃப்பிசிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!

06/10/2026 Leave a Comment

வெளிநாட்டிலிருந்து நேற்று (05) இரவு நாட்டிற்கு வருகை தந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே அவரை இவ்வாறு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி குறித்த விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் பங்கேற்காது மருத்துவ சிகிச்சை பெறவென கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றிருந்தார்.

எவ்வாறாயினும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷவினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (05) எதிர்பார்ப்பு பிணை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

சரணவின் மனைவி உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!

06/10/2026 Leave a Comment

லஞ்சம் கொடுத்தல் மற்றும் லஞ்சம் பெற்றுக் கொள்ளுதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி, நீதிமன்ற ஊழியர் ஒருவர் மற்றும் பதிவாளர் ஒருவர் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 11இல் நிலுவையில் உள்ள மற்றுமொரு லஞ்ச வழக்கு தொடர்பான தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக, 50,000 ரூபாவை லஞ்சமாக வழங்கியமை, பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு அனுசரணை வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் மூவரும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபையின் தலைவராக சரண குணவர்தன பணியாற்றிய காலத்தில், எவ்வித தேவையும் இன்றி தனது மனைவியின் மாதிவெல வீட்டை கள்ளத்தனமாக வேறு ஒருவரது பெயருக்கு மாற்றி, மீண்டும் அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபைக்கே குத்தகைக்கு விட்டதன் மூலம் இரண்டு மில்லியன் ரூபாவை மோசடி செய்த வழக்கு தொடர்பிலேயே, தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறு லஞ்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபையின் தலைவராக இருந்தபோது, வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட சரண குணவர்தனவிற்கு, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

மஹிந்த கஹந்தகம ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது!

06/10/2026 Leave a Comment

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) இரவு மிரிகான பகுதியில் உள்ள உணவகத்திற்கு அருகில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Filed Under: செய்திகள்

நாமலின் சட்ட ஆலோசகர் வழங்கிய ‘லோ பொயின்ட்’ ஒரு பொறி!

06/10/2026 Leave a Comment

நாமல் ராஜபக்ஷவிற்காக செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் சட்டத்தரணி சாகர காரியவசம் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை சான்றுகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித குற்றப்பத்திரிகையும் இன்றி நாமல் ராஜபக்ஷ சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இருப்பினும், நிதி குற்றங்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ முதன்முதலில் கைது செய்யப்பட்டது ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடும் அழுத்தம் காரணமாகவே ஆகும்.

அவர் விளக்கமறியலில் இருந்தபோது, “குரக்கன் வாசனை” (குரஹன் सुவඳ) என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் அன்றைய “அத” செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தன. அக்கட்டுரைகளில் நாமலின் கைதி இலக்கம் 5502 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் அக் குற்றச்சாட்டுகள் மூடி மறைக்கப்பட்டு, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் நாமலுக்கு தனித்தனியாக அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

இரும்பு தண்டவாளங்களுக்கு உயிரூட்டிய மனிதர்களின் கதை!

06/10/2026 Leave a Comment

‘தித்வா’ சூறாவளி காரணமாக மலையக புகையிரத பாதை நூற்றுக்கணக்கான பாரிய மண்சரிவுகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், கம்பளை வரையிலான பகுதியை மீண்டும் புனரமைத்து கட்டியெழுப்பியுள்ளமை ஓர் அதிசயம் என நடுநிலையான அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னைய நாள் இரவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதை அடுத்து, சிலர் மகிழ்ச்சி அடைவதைக் காண முடிந்தது.

இருப்பினும், தண்டவாளத்தை விட்டு விலகிய புகையிரதம் மீண்டும் வெற்றிகரமாக தண்டவாளத்தில் உயர்த்தப்பட்டமை தொடர்பான மகிழ்ச்சிகரமான காணொளியும், மலையக வீதியில் புகையிரத போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பான காணொளியும் கீழே தரப்பட்டுள்ளன.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 603
  • Next Page »

Recent Posts

  • வழக்கு முடியும் வரை ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்!
  • ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
  • முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.