5000 பேருக்கு வேலை பறிபோகும் நிலைமை…

garment factory 01.07.2022

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதனால் தொழிலாளர்கள் பலர் தொழில்வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் தேசிய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆடைத்துறையில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் இம்மாதம் தொழிற்சாலைகளை மூடிவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அந்த மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 5000 தொழிலாளர்கள் வேலையை இழப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்