ஆளும் கட்சியை குறை கூறுகிறது எதிர்க்கட்சி… எதிர்கட்சியை குறை கூறுகிறது ஆளும் கட்சி…

Sajith with gotta 29.03.2021

தற்போதைய இலங்கையின் அரசியல் சூழலில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியை ஆளும் கட்சியும்   மாறி மாறி குறை சொல்லும் நிலைமை அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

27.03.2021 மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவெல்கெலே கிராம சேவகர் பிரிவின் தேரெங்கல மகாவித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 16வது நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  உரையாற்றுகையில்,

” கடந்த அரசாங்கத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையவும் கொள்கை ரீதியாக பாரிய வீழ்ச்சிகளும் ஏற்பட்டன.  தேசிய பாதுகாப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. 

கடந்த காலத்தில் MCC உடன்படிக்கை பற்றி அடிக்கடி பேசப்பட்டது. கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது.  

கடந்த காலத்தில் MCC உடன்படிக்கை பற்றி அடிக்கடி பேசப்பட்டது. கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது.

அடுத்து. கிழக்கு முனையம் அதுவும் நாம் செய்த ஒன்றல்ல. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். 

கடந்த அரசாங்கத்தின் தவறுகளை நாம் இப்போது சரி செய்து வருகிறோம்.  நான் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ள எந்தவொரு பிரச்சினையும் எமது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையல்ல.” என்று கடந்தகால அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் மற்றும்  அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் பொது பினைமுறி ஊழல் மேற்கொள்ளப்பட்டதும், கோட்டாபய அரசாங்கத்தில் சீனி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த அரசாங்கம் திருடர்களை கைது செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள். இந்த அரசாங்கமும் அவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இரு அரசாங்கமும் திருடர்களை பாதுகாக்கின்றது என்ற குற்றச்சாட்டை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்