யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு மூடப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, இன்று தொடக்கம் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூடப்படும்.
ஏனைய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் வழமை போல் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொவிட் வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5










