கொரோனா பெருந்தொற்று மேல் மாகாணத்தில் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளும், வகுப்புகளும் ஒரு வருடத்திற்குப் பின் இன்று (29) ஆரம்பமாகிறது.
சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் பாடசாலை நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள முன்பள்ளிகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை,பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பரீட்சை மற்றும் ஏனைய போட்டிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவது பொருத்தமில்லை என்று பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டிருக்கும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இரண்டாம் தவணை அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2










