தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (02N – 11N> 83E – 93E) கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கிலோமீற்றர் வரை அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரேபிய கடற்பரப்புகளில் (00 – 08N> 64E – 78E) கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிக் கலங்கள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.










