2021 மாகாணசபைத் தேர்தல்… இறுதி முடிவு இன்று ?

vote 29.03.2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக, அமைச்சரவையில் முன்வைத்த இர ண்டு மாற்று யோசனைகள் குறித்து கடந்த வாரத்தில் மதிப்பாய்வு செய் யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தை இரத்து செய்து பழைய முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கும், புதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், மாகாண சபை தேர்தல்களை கலப்பு முறையின் கீழ் நடத்துவது தொடர்பான யோசனைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்தன.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்