‘கெகில்லே ஆணைக்குழு’ விசித்திரமான ஆணைக்குழு நீதித்துறை தத்துவத்தை முறைதகாதவகையில் பாவித்துள்ளது – மவிமு நீதிமன்றத்திடம்…

image_2021-03-26_172433

அதிகாரத்திற்கு வந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியால் உடனடியாக அரசியல் பழிவாங்கல் பற்றி புலனாய்வு செய்வதற்காக  நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மோசடிப் பேர்வழிகளுக்கு, ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக தற்போது  தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற   79 வழக்குகளை  வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரை செய்தமை ஊடாக   மேற்படி ஆணைக்குழு  நீதிமன்றங்கள் கொண்டுள்ள  தத்துவங்களை முறைதகாதவகையில் பாவிப்பதற்கு எதிராகவும், அதைப்போலவே மோசடிப் பேர்வழிகளுக்கு ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக செயற்பட்ட  மவிமு தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகள் அனைத்தையும் இடைநிறுத்தவும்  அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து   விடுவிக்குமாறும் நேற்று  (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்    ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இத்தருணத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திசாநாயக்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார ஆகியோர் பங்களிப்புச் செய்தனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்