Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்!

02/03/2021 Leave a Comment

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில்  இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அதானிக்கு…

02/03/2021 Leave a Comment

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கென்றுக் கூறி, இந்தியா அதானி நிறுவனம் மற்றும் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மேற்படி திட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட காலத்தில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்து அதனை திரும்பவும் இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் உள்ளூர் முகவராக ஜான் கீல்ஸ் நிறுவனம்  பெயரிடப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசாங்கம் இன்னும் முதலீட்டாளரை நியமிக்கவில்லை.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் அந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

களணிதிஸ்ஸ செயலிழந்து 18 மாதங்கள் … நட்டம் 25 பில்லியனுக்கு மேல்…

01/03/2021 Leave a Comment

களணிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்நிலையம் செயலிழந்து தற்போது பதினெட்டு மாதங்களுக்கு மேல் கழிந்துள்ளபோதிலும்  இற்றைவரை அதனை இயல்புநிலைக்கு கொண்டுவர இயலாதுள்ளதெனவும் இன்றளவில் அரசாங்கத்திற்கு இருபத்தைந்து பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நட்டம் நேர்ந்துள்ளதெனவும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன்  ஜயலால் குறிப்பிடுகிறார். 

2019 ஓகத்து மாதத்தில் மின்நிலையப் பணிகள்  அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டதெனவும்  அது அவ்வருடத்தின் ஒற்றோபர்   மாதத்தில் மீண்டும் இயக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்ததெனவும் செயலாளர் கூறினார்.  

பராமரிப்புப் பணிகளின்கீழ் பிற்பாக்கி இயந்திரத்தின்  சுழலி (Rotor) இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்ததோடு பின்னர் அதனை துபாய்க்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அதன் பின்னர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுசென்று ஏற்புடைய திருத்தவேலைகளை  மேற்கொண்டு இலங்கைக்கு கொண்டுவந்து அதன் சமநிலை பற்றி   பரீட்சித்துப் பார்க்காமல்  அவசரஅவசரமாக  பொருத்த நடவடிக்கை மேற்கொண்டமையால் அது பெருமளவில் சேதமடைந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க சுழலிப் பகுதிக்கும் இரண்டு பெயாரிங் (உராய்தல் தடுப்பு) பகுதிகளுக்கும் சேதமேற்பட்டமையால் இற்றவைரை மின்நிலையத்தை இயக்க இயலாமல் போயுள்ளதெனவும் அவர் குறிப்பிடுகிறார்.  

இந்த பிறப்பாக்கி இயந்திரத்தை இந்நாட்டுக்கு கொண்டுவருவதிலிருந்து  மிகவும் அவசரஅவசரமாகவே செயலாற்றப்பட்டதெனவும்  அதன் காரணமாக மின்சார சபைக்கு மிகப்பெரிய செலவு ஏற்கப்படவேண்டிய நிலையேற்பட்டதெனவும்  திரு. ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டினார்.

வருடமொன்றுக்கு நாட்டுக்கு 36,000 கிகாவொற் மணித்தியாலத்திற்கு அதிகமான மின்சாரம் அவசியமாகின்றதெனவும்  அதில் 1,084 கிகாவொற் மணித்தியாலங்கள் இந்த மின்நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.   

இந்த மின்நிலையம் ஊடாக மின்சால அலகொன்று ரூபா 18.00 இற்கும் 20.00 இற்கும் இடையிலான செலவில் உற்பத்திசெய்ய இயலுமெனவும்  மின்நிலையம் செயலிழந்தமையால் நாடு இழந்த மின்சாரத்தின் அளவினை தனியார்துறையினரிடமிருந்து கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார். 

அதற்காக மின்சார அலகொன்றுக்கு ரூபா 35.00 இற்கு மேலாக செலவிடப்படுகின்றதெனவும் இதனால் ஒவ்வொரு மின்சார அலகிற்காகவும் அரசாங்கம் ரூபா 15.00 மேற்பட்ட  தொகையின செவிலவேண்டி நேரிட்டுள்ளதெனவும் அவர் கூறினார். 

பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் துணை உற்பத்தியாக கிடைக்கின்ற நெப்தாவே களணிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்நிலையத்திற்காக பாவிக்கப்பட்டதெனவும்  அற்காக ஒரு லீற்றர் நெப்தாவுக்காக மின்சார சபை  74 ரூபாவினை வழங்கியதெனவும் இலங்கை மின்சார ஓழியர் சங்கத்தின் செயலாளர் திரு. ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். 

எனினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றளவில் தனியார்துறைக்கு ஒரு லீற்றர் நெப்டாவை ரூபா 30 இற்கே வழங்குகின்றதெனவும்  இதனால் நெப்தா சந்தைப்படுத்திலின்போதும்  அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார். 

Filed Under: செய்திகள்

மார்ச் 7 கருப்பு ஞாயிறு தினம் பிரகடனம்… கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானம்…

01/03/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடு பூராகவும் ´கருப்பு ஞாயிறு´ தினமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழநத மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்படுவதாகவும், அன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கருப்பு ஆடைகளை அணிந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

01/03/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=432

Filed Under: Cartoons

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவு – 112 பேர் 

01/03/2021 Leave a Comment

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 352 பேரில், பெரும்பாலான 112 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹாவில் இருந்து 57 பேரும், இரத்தினபுரியில் இருந்து 50 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 25 பேரும், காலியைச் சேர்ந்த 24 பேரும், கண்டியைச் சேர்ந்த 18 பேரும், களுத்துறையை சேர்ந்த 16 பேரும், பதுளையிலிருந்து 14 பேரும், மாத்தளையிலிருந்து 07 பேரும், கேகாலையிலிருந்து 06 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 04 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, ஹம்பந்தோட்டை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து ஒருவரும் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

கிளிநொச்சியில் போராட்டம்…

01/03/2021 Leave a Comment

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டமானது, பல்வேறு சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அராங்கத்தை நிறுத்தக்கோரி கோசங்கள் எழுப்பப்பட்டிருந்ததுடன் சர்வதேச நாடுகள் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Filed Under: செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்

01/03/2021 Leave a Comment

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

‘‘நாங்கள் மூன்று அணிகள் மோசமாக பாதிக்கப்படுவோம். சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் ஐந்து அல்லது ஆறில் வெற்றி பெற்று, வெளியில் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு சொந்த மைதானம் கூடுதல் அனுகூலமாக இருக்கும். நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியுள்ளது’’ என மூன்று அணிகளில் ஒரு அணியின் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Filed Under: ஆடுகளம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை குப்பைத்தொட்டிக்குள் போட்டு மறைக்க கோட்டாபாயவிற்கு உரிமையில்லை – அநுர குமார திஸாநாயக்க

01/03/2021 Leave a Comment

“2015 ஆம் ஆண்டில் அப்போது நிலவிய ராஜபக்ஷ ஆட்சி சீரழியக் காரணமாக அமைந்த இந்த தனித்துவமான விடயங்கள், அவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள  விதப்புரையை வழங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு  இந்த அறிக்கையை குப்பைத்தொட்டிக்குள் போட்டு மறைக்க உரிமையில்லை.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (28) பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

சனவரி 15 ஆந் திகதி சனாதிபதி கோட்டபய ராஜக்ஷவினால் அமைச்சரபை் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்கொலைகள் பற்றிய வழக்குகள், ஆட்கடத்தல்கள் பற்றிய வழக்குகள், நிதிசார் குற்றச்செயல்கள் பற்றிய வழக்குகள் என்பவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிப்பதே அதன் நோக்கமாக அமைந்தது. உதயங்க வீரதுங்கவின் மிக் தாக்குதல் வானூர்திகள் வழக்கு, உதய கம்மன்பிலவின்  நிதி மோசடி வழக்கு, பசில் ராஜபக்ஷ திரு நடேசன் மல்வானை வீடு பற்றிய வழக்கு, சீ.எஸ்.என். அலை வரிசையை தொடங்க நிதி திரட்டல் பற்றிய யோஷித ராஜபக்ஷவின் வழக்கு, அமெரிக்காவில் தூதரகமொன்றை கொள்வனவு செய்தல் பற்றிய ஜாலிய விக்ரமசூரிய வழக்கு, செலாவணி ஆணைக்குழுவுக்குச் சொந்தமான பணத்தை தாருண்யயட்ட ஹெடக்  அமைப்பிற்கு வழங்குதல் பற்றிய நாலக்க கொடஹேவா வழக்கு, கப்பம் பெற்றுக்கொள்வதற்காக   11 பிள்ளைகளை கடத்திச்சென்று படுகொலை செய்தமை பற்றிய வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய பிள்ளையான வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கு, லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு, போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன், கீத் நெயார்  போன்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஆட்கடத்தல் பற்றிய வழக்கு,  அரச நிதி முறைகேடான பாவனை பற்றிய வழக்கு, அவன்காட் வழக்கு போன்ற பெருமளவிலான வழக்குகளை வாபஸ் பெறுதல் பற்றி சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிக்க   அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் என்னை உள்ளிட்ட 2 பேருக்கு அரசியலமைப்பினை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு  அவை பற்றி புலனாய்வு செய்வதற்காக மேலுமொரு விசேட சனாதிபதி ஆணைக்குழு  கடந்த சனவரி 29 ஆந் திகதி நிறுவப்படுகின்றது.  அந்த ஆணைக்குழுவிற்கு ஒருமாதம்  கழிந்துள்ளது.   

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கை  சனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு  அதனையும் மறைத்துவைக்க முயற்சி எடுக்கப்பட்டதோடு கர்தினால் ஆண்டகையின், ஏனைய அரசியல் கட்சிகளின் மற்றும் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி நேரிட்டது.  அந்த அறிக்கையின் ஏறக்குறைய ஆறு தொகுதிகள்  உள்ளதோடு முதலாவது தொகுதி மாத்தரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பற்றி இற்றைவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய பிரயத்தனத்தின் பின்னரே சட்டத்துறை தலைமை அதிபதிக்கும் அதன் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள இயலுமாயிற்று. உயிர்த்த ஞாயிறு அறிக்கைக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளவேளையில் அரசியல் பழிவாங்கல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு அமைச்சரவைத் தீர்மானத்தை மேற்கொண்டு ஊழல்பேர்வழிகளை வழக்குகளிலிருந்து விடுதலை செய்விக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த அறிக்கை என்னையும் பிரதிவாதியாக்கியுள்ள  அறிக்கையின் விதப்புரைகள் அமுலாக்கப்பட்டு வருகின்ற  இந்த நாட்டின் பெருந்தொகையான குற்றச்செயல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலை செய்தல்கள், கொள்ளையடித்தல்கள் பற்றிய வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளல்  பற்றிய விடயங்களை உள்ளடக்கிய விசேடமன அறிக்கையாகும். எனவே கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின்  பெற்றோர்களுக்கு  அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதென்பதை அறிந்துகொள்வதற்கான  தார்மீக உரிமை கிடையாதா?  பொதுமக்களின் ஆதனங்களைத் திருடிய ஊழல்பேர்வழிகின் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரை செய்யப்படுகின்ற அறிக்கை பற்றி அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை கிடையாதா?   கீத் நெயார், போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன் போன்ற ஊடகவியலாளர்களைப் போன்றே ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை கிடையாதா? எக்னெலிகொடவினை கடத்திச்சென்று காணாமல்போகச் செய்வித்தமை தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள  அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்  உரிமை கிடையாதா?

இனிமேலும் இந்த அறிக்கையை மறைத்துவைக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. ராஜபக்ஷவிற்கு நியாயமான உரிமை கிடையாது. அந்த அறிக்கையின் விதப்புரைகளை தமக்கு அவசியமானவகையில்  அமுலாக்கச் செய்விக்க  கோட்டாபய ராஜபக்ஷவிற்கு  உரிமை கிடையாது. சனாதிபதி  தனக்கு பரம்பரை வழியாக கிடைத்த அரச மணிமுடிக்கு உரித்தான ஒருவரல்ல என்பதையும் இந்த நாட்டுப் பிரசைகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஓர் ஆள் என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

எம்மீது தொடுக்கப்படுகின்ற பொய்க்  குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நாங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் எமக்கு ஒரு நியாயமான உரிமை இருக்கின்றது இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்துகொள்ள.  அதைப்போலவே எங்களுக்கு இந்த அறிக்கை தொடர்பில் ஓர் ஆர்வமும் சந்தேகமும் உள்ளது. பொலீசார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்  நீதிமன்றம் ஆகிய  ஒழுங்கமைந்த நிறுவனம்சார் செயற்பாங்கிற்கு முகங்கொடுக்க நாங்கள் தயார். நாங்கள் குற்றஞ்செய்த, பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் அல்ல.  நாங்கள் ஏனைய ஆட்களைப்போன்று வழக்குகளுக்குப் பயந்து சிங்கப்பூருக்கு தப்பியோடுபவர்கள் அல்ல. நோய்வாய்ப்படவும் மாட்டோம்.   உங்களுக்குத் தெரியும்  ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து தற்போது ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.  ஒருநாள்கூட சுகவீனமுற்றதாக நாங்கள் கேள்விப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழக்குகளுக்குப் பயந்து ஒவ்வொருநாளும் நோய்வாய்ப்படுகிறார். நாங்கள் அதைப்போல நீதிமன்றத்தைத் தவிர்த்துக் கொள்பவர்கள் அல்ல.   கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணப்படி கட்டியெழுப்பிய விசித்திரமான ஆணைக்குழுக்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதை  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மனதிற்கொள்ள வேண்டும். எனவே இந்த அறிக்கையை மக்கள்மயப்படுத்துமாறு நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.  

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மைத்திரிபால மௌனம்…

01/03/2021 Leave a Comment

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தான்  வெளியிடப்போவதில்லையென மைத்திரிப்பால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினசரி ஆங்கில செய்தித்தாள் ஒன்றிலேயே இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் , “எவருக்கும் விரும்பியதைக் கூற இயலும். ஆனால், முன்னாள் ஜனாதிபதிமீது ஈஸ்டர் தாக்குத்தல் ஆணைக்குழு அறிக்கை சுமத்தியுள்ள குற்றசாட்டு தொடர்பில் இந்நேரம் எந்த பதிலையும் வழங்கமுடியாது.” எனக்கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதுபற்றி அறிவதற்காக அந்நேரம் ஜனாதிபதியாக மைத்திரிப்பால சிறிசேனவினால்  இதுகுறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கடந்த தினத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மைத்திரிப்பால சிறிசேன தாக்குதலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 590
  • 591
  • 592
  • 593
  • 594
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.