வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகள் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாகவும், குறித்த செயற்பாட்டிற்கு அரச அதிகாரிகள் துணை நிற்பதாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட குழுவொன்று அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி நீண்ட காலமாக இந்த நடவடிக்கையமுன்னெடுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
