Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரணை வேண்டும். – மனோகணேசன்

04/03/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

“எமது பலத்த கோரிக்கைகளின் பின்னர்தான், உயிர்த்த ஞாயிறு விசாரணை குழு அறிக்கை பாராளுமன்றத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பில் எங்களுக்கு பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன. சஹரான் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பயங்கரவாத கும்பலுக்கும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் தொடர்பில்லை என்பது உண்மை.

ஆனால், செய்தவர் பயங்கரவாதி சஹாரான் என்றால், செய்வித்தவர் யார் என்ற பிரதான கேள்வி எழுகிறது.

சஹாரானை தடுக்க, கைது செய்ய தவறி விட்டர்கள். பொறுப்பு கூரலில் தவறி விட்டார்கள். இந்த குற்றசாட்டுகளை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை சுட்டிக்காட்டி விட்டு மட்டும் தப்ப முடியாது. அதற்கு அப்பால் பல உண்மைகள் உள்ளன. அவை வெளியே வர வேண்டும். அவற்றை விசாரியுங்கள்.”

Filed Under: செய்திகள்

அமெ.பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளத் தயார் ரஷ்யா பதிலடி…

04/03/2021 Leave a Comment

அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கையில் , அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. அலெக்ஸிக்கு கடந்த வருடம் உடல் நலம் பாதித்தத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவும் இல்லை. எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Filed Under: உலகம்

இரணைதீவில் சடலங்கள் – அரசியற் கட்சிகளின் கருத்துக்கள்

04/03/2021 Leave a Comment

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பற்றி இதுவரையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுவிடயம் தொடர்பில் இரணைதீவு மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருவதுடன், சடலங்களை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்பட்ட குழிகளையும் மூடியுள்ளனர்.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் மக்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்ததுடன், பல போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்து ஜனாஸாக்களை தகனம் செய்தது.

சடலங்களை அடக்கம் செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கி, பல நாடுகளில் அது நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

கடந்த தினத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. அதன் பின் இம்ரான் கான் இலங்கை வந்திருந்த சமயம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதில் “இலங்கையில் எங்கு ஒரு முஸ்லிம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தாலும் இரணைதீவில்தான் அடக்கம் செய்யவேண்டும்.” என்ற உட்கருத்து இருந்தது. இதற்கு இரணைதீவு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும், அரசாங்கம் இதனை இடை நிறுத்தாது முன்னெடுத்து வருகிறது.

இது குறித்து தமிழ்பேசும் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

“இரணைதீவில் சடலங்கள் புதைப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளப்போகிறேன்.” – டக்ளஸ் தேவானந்தா (ஈ.ம.ஜ. மு – பா.உ) 

“இது தமிழ் – முஸ்லிம் உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கை ஆகும்.” – ம.ஆ.சுமந்திரன் (த.தே.கூ – பா.உ)

“ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான 06 இடங்கள் வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. – கபீர் ஹாசிம் (ஐ.ம.ச – பா.உ)

“இரணைதீவு ஜனாஸா அடக்க விவகாரம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவை சாதகமாகும் முயற்சியே. இது சிறுபான்மை இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.” – ஸ்ரீதரன் (த.தே.கூ – பா.உ)

Filed Under: செய்திகள்

இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

04/03/2021 Leave a Comment

இன்று இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கான ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்போட்டியில், இலங்கை அணிக்கு அஞ்சலோ மத்தியூசும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கீரன் பொலார்ட்டும் தலைமை தாங்கினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்ப வீரர் நிரோஷன் திக்வெல்ல (33), பெத்தும் நிஸ்ஸன்க (39) ஆகிய இருவரே இலங்கை துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

பின்பு இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பெடுத்தாடியது. இதன்போது 3 ஓவர்களில் 46 ஓட்டங்களைக் பெற்ற நிலையில், அக்கில தனஞ்சய அடுத்த ஓவரின்; 3 பந்துகளில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

பின்னர் அக்கில தனஞ்சயவின் 3ஆவது ஓவரில் கீரன் பொலார்ட் 6 சிக்ஸ்களை பெற்று போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

Filed Under: ஆடுகளம்

அண்டார்டிகா பனிப்பாறையில் பெரும் விரிசல்….

04/03/2021 Leave a Comment

அண்டார்டிகா பனிப்பாறையில் பெரும்விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து சூழலியல்ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காலநிலை மாற்றத்தால் உலக அளவில் பருவ நிலைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் கால நிலை மாற்றம் காரணமாக பனிப்பறைகள் உருகி வருகின்றன.இந்நிலையில் அண்டார்டிகாவில் மீண்டும் பனிப்பாறை ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்டார்டிகாவில் வெட்டல் பகுதியில் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைப்போல 20 மடங்கு அளவுள்ள பெரிய பனிப்பாறையில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூப்பது வருடங்களில் இம்மாதிரியாக மூன்று முறை பனிப்பாறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “ நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்து வது, பேரிடர்களுக்கான தயார்நிலை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Filed Under: உலகம்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

04/03/2021 Leave a Comment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஆவார். நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் மார்க் சாப்மன் சேர்க்கப்பட்டார்.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (69 ரன், 44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் (70 ரன், 31 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் விளாசினர். இதில் ஜேம்ஸ் நீஷம் வீசிய ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி, 2 சிக்சர் என்று 28 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் (4 ரன்), கேப்டன் கேன் வில்லியம்சன் (9 ரன்) விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் சாய்த்து ஆரம்ப ரன் வேகத்தை முடக்கினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ஒரே ஓவரில் (13-வது ஓவர்) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலைய செய்ததுடன், கடைசி கட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினார்.

நியூசிலாந்து அணி 17.1 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 43 ரன்னும், கான்வே 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்டன் அகர் 6 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதில் 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை ருசித்து 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) நடக்கிறது.

Filed Under: ஆடுகளம்

யாழில் காணிப் போராட்டம் – போராட்டக்காரர்கள் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்தனர்.

04/03/2021 Leave a Comment

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று (வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Filed Under: செய்திகள்

விக்னேஸ்வரன் மாகாண சபையை ஆட்சி செய்தபோது பாலர் வகுப்பினை கூட ஒழுங்காக நடத்தவில்லை. – சாணக்கியன்

04/03/2021 Leave a Comment

விக்கினேஸ்வரன் முதலமைச்சராகவிருந்து மாகாண சபையை ஆட்சி செய்தபோது பாலர் வகுப்பினை கூட ஒழுங்காக நடத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் (04.03.2021) தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது சில அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. தமது வாக்கு வங்கிகளை தனிப்பட்ட முறையில் அதிகரிப்பதற்காக தனிநாடு கோருகின்ற சிந்தனைகளை தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டிகொண்டு இருக்கின்றனர். இதனை கூறுகின்றவர்களுக்குத் தெரியும் இன்றைய நிலையில் தனிநாடு ஒரு சாத்தியமற்ற விடயம் என்பது.

Filed Under: செய்திகள்

மத்திய வங்கிக்கு எச்சரிக்கை……

04/03/2021 Leave a Comment

இலங்கை மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளைப்போல் இலாபத்தின் பின்னால் செல்வதை தடுத்து சாதாரண மக்களுக்கும் நாட்டுக்காகவும் புதிய பொருளாதார திட்டங்களை தயாரிக்கவேண்டுமென கோப் குழு வலியுறுத்துகின்றது.

கடந்த வாரத்தில் கூடிய கோப் குழு இலங்கை மத்திய வங்கி தொடர்பாக மேற்கொண்ட மீளாய்வின்போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

2021 பெப்புருவரி 19 ஆந் திகதியளவில் விசேட வைப்புக் கணக்கொன்று மூலமாக 323 மில்லியன் டொலர் சேமிப்பு மீதியொன்றை பேணிவருதல் சம்பந்தமாக புலனாய்வு செய்து மத்திய வங்கிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் சனாதிபதி கடந்த வருடத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து மத்திய வங்கியால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான டூலை (பொறியினை) முன்வைப்பதில்லையென பகிரங்கமாகவே குற்றச்சாட்டினை முன்வைத்தார். அதன் பின்னர் மத்திய வங்கி பெருமளவில் பணத்தை அச்சடித்து சந்தைக்கு விநியோகிக்கின்ற செயற்பாங்கில் பிரவேசித்தது.

Filed Under: செய்திகள்

வடக்கு – கிழக்கில் காணி அபகரிப்பு… மட்டக்களப்பில் மக்களின் எதிர்ப்பு போராட்டம்

03/03/2021 Leave a Comment

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகள் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாகவும், குறித்த செயற்பாட்டிற்கு அரச அதிகாரிகள் துணை நிற்பதாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட குழுவொன்று அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி நீண்ட காலமாக இந்த நடவடிக்கையமுன்னெடுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 586
  • 587
  • 588
  • 589
  • 590
  • …
  • 603
  • Next Page »

Recent Posts

  • வழக்கு முடியும் வரை ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்!
  • ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
  • முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.