விக்கினேஸ்வரன் முதலமைச்சராகவிருந்து மாகாண சபையை ஆட்சி செய்தபோது பாலர் வகுப்பினை கூட ஒழுங்காக நடத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்றையதினம் (04.03.2021) தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது சில அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. தமது வாக்கு வங்கிகளை தனிப்பட்ட முறையில் அதிகரிப்பதற்காக தனிநாடு கோருகின்ற சிந்தனைகளை தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டிகொண்டு இருக்கின்றனர். இதனை கூறுகின்றவர்களுக்குத் தெரியும் இன்றைய நிலையில் தனிநாடு ஒரு சாத்தியமற்ற விடயம் என்பது.
3










