இன்று இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கான ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்போட்டியில், இலங்கை அணிக்கு அஞ்சலோ மத்தியூசும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கீரன் பொலார்ட்டும் தலைமை தாங்கினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்ப வீரர் நிரோஷன் திக்வெல்ல (33), பெத்தும் நிஸ்ஸன்க (39) ஆகிய இருவரே இலங்கை துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
பின்பு இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பெடுத்தாடியது. இதன்போது 3 ஓவர்களில் 46 ஓட்டங்களைக் பெற்ற நிலையில், அக்கில தனஞ்சய அடுத்த ஓவரின்; 3 பந்துகளில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
பின்னர் அக்கில தனஞ்சயவின் 3ஆவது ஓவரில் கீரன் பொலார்ட் 6 சிக்ஸ்களை பெற்று போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.










