Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

2020 இல், உலகளவில் வன அழிப்பில் முதலிடத்தில் இருப்பவர் கோட்டாபய ராஜபக்ச – பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

22/03/2021 Leave a Comment

“உலகளவில் 2020 ஆம் ஆண்டு மாபெரும் சுற்றாடல் அழிவுக்கும்,  வன அழிவுக்கும் தலமைத் தாங்கியவர்களில் முதலிடத்தில் இருப்பவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (22) கொழும்பில்  இடம்பெற்ற கட்சியின் “டோசருக்கு எதிரான”, “உயிர்மூச்சைக் காப்பாற்றிக்கொள்ள” என்ற அரசாங்கத்தின் சுற்றாடல் அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும், 

“எமது நாட்டில் கடந்த வருடமென்பது, பிரித்தானியரின் ஆட்சிக்குப் பின்னர் அரச அனுசரணையுடன், அரசாங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் சுற்றாடல் அழிவுக்கு முகம் கொடுத்த வருடமாகும். உலகளவில் 2020 ஆம் ஆண்டு மாபெரும் சுற்றாடல் அழிவுக்கு, வன அழிவுக்கு தலமைத் தாங்கியவர்களில் முதலிடத்தில் இருப்பவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபாயவின் வர்க்கத்தைச் சேர்ந்த, இனவாதியான பிரேசிலின் ஜனாதிபதி ஜைர் பொல்சனாரோ.

சிங்கராஜ வனம், கொழும்புக்கு அந்த பக்கம் இருக்கும் முத்துராஜவெல கம்பெனிகளுக்கு வழங்கப்படுகின்றன. வெலிகம பிரதேச வனாந்தரங்கள் விற்கப்படுகின்றன. நில்கலே வனத்தில் 62,500 ஏக்கர் தரைமட்டமாக்க பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 100, 50, 15, 10 ஏக்கர் என்று பாரியளவில் சுற்றாடல் அரசாங்கத்தின் அமைச்சர்களின் தலைமையில் அழிக்கப்படுகின்றது.

இதுகுறித்து நாம் மட்டுமல்ல, முத்துராஜவெல வன அழிப்புக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போராடுகிறார். அவரும் சுற்றாடல் தீவிரவாதியா? என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார். 

Filed Under: செய்திகள்

15 மாதங்களில் வெட்டவெளியாக்கப்பட்டன 62,000 ஏக்கர் ஒதுக்கக்காடுகள்!

22/03/2021 Leave a Comment

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2021 மார்ச் மாதத்தில் இருவாரங்கள் வரையில் சட்டவிரோதமாக ஒத்துக்ககாடுகள் வெட்டவெளியாக்கப்பட்ட சம்பவங்கள் 270 பதிவாகியுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட 294 பேர் விசேட படையணி மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த 15 மாதங்களுக்குள் அவர்களால் வெளியாக்கப்பட்டுள்ள ஒதுக்கக்காடுகளின் பரப்பு 62,000 ஏக்கர் ஆகும். 2020 ஆம் வருடத்தில் 18,500 ஏக்கர் வெட்டவெளியாக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 43,500 ஏக்கர் ஒதுக்கக்காடுகள் 2021 வருடத்தில் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் வெட்டவெளியாக்கப்பட்டுள்ளன.

அதிகளவான சந்தேகநபர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களது எண்ணிக்கை 106 ஆக உள்ளது.

Filed Under: செய்திகள்

சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படும்… திட்டத்தில் சீனாவும் இணையும் – சமல் ராஜபக்ச கூறுகிறார்

22/03/2021 Leave a Comment

சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்காக சீன நிறுவனத்துடன் இணைந்து திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒருதொகை நிதியும் வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் அது செயற்படுத்தப்படவில்லை. அத்திட்டத்தை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

சிங்கராஜ வனத்திற்குள் ஒரு நீர்நிலை சுமார் 5 ஏக்கல் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு இரண்டு நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்போது இடம்பெறும் வன அழிவுக்கு பதிலாக 50 தொடக்கம் 100 ஏக்கரில் மரம் நடுவதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.” என  தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…

22/03/2021 Leave a Comment

பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 37 வயதான மதுரையை சேர்ந்த தீப்பெட்டி கணேசன் என்ற நகைச்சுவை நடிகரே மரணமடைந்தவராவார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இன்று காலமானார். தீப்பெட்டி கணேசனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழில் பில்லா 2, ரேணிகுண்டா, வேல்முருகன் போர்வெல்ஸ், தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

தனியார் பஸ் – புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் – தலைமன்னாரில் சம்பவம்

22/03/2021 Leave a Comment

தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள  புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பஸ்  ரயில் மோதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (22)  திங்கட்கிழமை காலை குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள   ரயில் கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இதன்போது, குறித்த ரயில் கடவைக்கான   தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த ரயில் கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதி நிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Filed Under: செய்திகள்

உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் – மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

22/03/2021 Leave a Comment

சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (22) திங்கட்கிழமை கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது.

உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் என்ற தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

மேலும்,  சுற்றாடலை பாதுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து – புறக்கோட்டை வரை பேரணியாகச் செல்வதற்கும் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

வவுனியா தெற்கு பிரதேச செயலகம் முற்றுகை – பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

22/03/2021 Leave a Comment

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி தெற்கு (சிங்கள) பிரதேச செயலகம் இன்று (22) பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரால் முற்றுகையிடப்பட்டது.

அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவரகளின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Filed Under: செய்திகள்

கொரோனா பரவல்… சீனாவை முந்தியது இலங்கை

22/03/2021 Leave a Comment

உலக நாடுகளின் கொவிட் வைரஸ் பரவல் அட்டவணையில் சீனாவை இலங்கை முந்தியது. அதன்படி, இலங்கை 87 ஆவது இடத்திலும் சீனா 88 ஆவது இடத்திலும் உள்ளது.

ஆரம்பத்தில் சீனாவில் வேகமாக கொவிட் வரைஸ் பரவிய போதிலும், சீன அரசாங்கத்தினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இலங்கையில் நிலைமை தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 90,200 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், சீனாவில் 90,106 ஆகக் காணப்படுகிறது.

இதுவரையில் இலங்கையில் கொவிட் வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் வரிசையில் அமெரிக்க முதலிடத்தில் மிகவும் ஆபத்தான நாடாவுள்ளது. இதுவரையில், 30, 521, 765 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 555,314 பேர் உயிரிழந்துள்ளனர்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

டி20 போட்டிகளில் அதிக வெற்றி – டோனியை முந்திய அஸ்கார் ஆப்கான்

21/03/2021 Leave a Comment

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளைக் குவித்த கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி முதல் இடத்தில் இருந்து வந்துள்ளார். அவர், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2வது இருபது ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.  இதனால், அந்த அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கான் 41 வெற்றிகளுடன் தோனியின் சாதனையை சமன் செய்து இருந்துள்ளார்.

தொடர்ந்து நேற்று நடந்த 3வது இருபது ஓவர் போட்டியில் ஜிம்பாப்வேவை 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்தது.  இந்த வெற்றியால், அஸ்கார் ஆப்கான் கூடுதலாக ஒரு வெற்றியைப் பெற்று 42 வெற்றிகளுடன் தோனியை முந்தியுள்ளார்.

3வது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் (33 வெற்றிகள்) உள்ளார்.  பாகிஸ்தானின் சர்ப்ராஸ் அகமது (29 வெற்றிகள்) 4வது இடத்திலும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி (27 வெற்றிகள்) 5வது இடத்திலும் உள்ளனர்.

Filed Under: ஆடுகளம்

இன்றும் கருப்பு ஞாயிறு…

21/03/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி,  இன்றும் கறுப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று மூன்றவாது தடவையாகவும் கறுப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வரை, தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராயர் கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 580
  • 581
  • 582
  • 583
  • 584
  • …
  • 604
  • Next Page »

Recent Posts

  • கிரேக்க பிணைமுறி வழக்கு: கப்ரால் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!
  • முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!
  • தலதா அதுகோரல திடீரென ஆவேசம்: ஷானி அபேசேகர மீதும் தாக்குதல்!
  • ஷிரந்தி ஓரங்கட்டப்பட்டார்: ஷிரந்தி ராஜபக்ஷ மொட்டு கட்சியின் உறுப்பினரல்லர் என சாகர காரியவசம் அறிவிப்பு!
  • கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது – இந்திய உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.