வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி தெற்கு (சிங்கள) பிரதேச செயலகம் இன்று (22) பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரால் முற்றுகையிடப்பட்டது.
அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவரகளின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
3









