கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2021 மார்ச் மாதத்தில் இருவாரங்கள் வரையில் சட்டவிரோதமாக ஒத்துக்ககாடுகள் வெட்டவெளியாக்கப்பட்ட சம்பவங்கள் 270 பதிவாகியுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட 294 பேர் விசேட படையணி மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 15 மாதங்களுக்குள் அவர்களால் வெளியாக்கப்பட்டுள்ள ஒதுக்கக்காடுகளின் பரப்பு 62,000 ஏக்கர் ஆகும். 2020 ஆம் வருடத்தில் 18,500 ஏக்கர் வெட்டவெளியாக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 43,500 ஏக்கர் ஒதுக்கக்காடுகள் 2021 வருடத்தில் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் வெட்டவெளியாக்கப்பட்டுள்ளன.
அதிகளவான சந்தேகநபர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களது எண்ணிக்கை 106 ஆக உள்ளது.
1









