Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஒசாகா

18/02/2021 Leave a Comment

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- 10-வது நிலையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா).

இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2019-ம் ஆண்டு சாம்பியன் ஆன அவர் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். செரீனா 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார்.

2-வது அரை இறுதி ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள ஜெனீபர் பிராடி (அமெரிக்கா)- 25-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இறுதி போட்டியில் ஒசாகாவுடன் மோதுவார்.

ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), கராட்சேவ் (ரஷியா), மெட்வதேவ் (ரஷியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

Filed Under: ஆடுகளம்

மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்…

18/02/2021 Leave a Comment

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயைத் தலையில் சுட்ட தலிபான் தீவிரவாதி, அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்கள் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் தன் ட்விட்டர் பக்கத்தில், ”மலாலா. உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டர் அப்பக்கத்தை முடக்கியது.

இதனைத் தொடர்ந்து மலாலா அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “இவர் தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் . நான் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர். இவர் எவ்வாறு சமூக வலைதளத்தில் மக்களை மிரட்ட முடியும். அவர் எவ்வாறு சிறையிலிருந்து தப்பித்தார்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார்.

Filed Under: உலகம்

தாராளமயக் கொள்கையை அரசாங்கம் கையாள்கிறது – கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

18/02/2021 Leave a Comment

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய அனைத்து கட்சிகளும் புதிய தாராளமய பொருளாதாரக் கட்டமைப்பில் பயணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர்.ஜீ.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (18) ‘லங்காதீப’ சிங்கள பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 

தொடர்ந்து இப்பாதையில் நாம் பயணிக்க வேண்டுமா என சிந்திக்க வேண்டும். ஒரு நோய்க்கு பரிந்துரைக்கும் மருந்துகள் சில நேரம் தவறாகலாம். தொடர்ந்து  அந்த மருந்தையே அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. புதிய தாராளமயமும் அவ்வாறுதான்.

Filed Under: செய்திகள்

ஜனாஸா அடக்கம் தொடர்பில் பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

18/02/2021 Leave a Comment

 

“பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமடைகிறேன். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு அன்புக்குரியவர்கள் மற்றும் மக்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வழங்கியபோதிலும், அதனைத் தொடர்ந்து “அது பிரதமரின் தனிப்பட்டக் கருத்து” என்று உதய கம்மன்பில தெரிவிதிருந்தார். 

Disappointed to see that the Government and PM are backing away from ending discriminatory cremation policy. People, including loved ones recently passed, deserve more respect for their rights from a democratic government.

— Ambassador Julie Chung (@USAmbSL) February 18, 2021

Filed Under: செய்திகள்

காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நீக்க அரசாங்கம் முயற்சி – காவிந்த ஜயவர்தன கூறுகிறார்.

18/02/2021 Leave a Comment

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வீண் செலவுகளை ஏற்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நடத்தி செல்வது பயனற்றது என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நீக்குவதற்கு முயற்சி செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நியாயத்தை கோரி நிற்பதை போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் நியாயம் கோருகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒரு இனத்திற்கு மாத்திரம் அனைத்து விடயங்களில் முன்னுரிமை வழங்கும்போது தேவையற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் அனைத்து இன மக்களையும் ஒன்றினைத்து அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் முன்னேறி செல்கிறது. இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும்.” என்றார்.

Filed Under: செய்திகள்

மாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்துகிறது.

18/02/2021 Leave a Comment

விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தல் மீது இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் சிவில் சமூகத்தின் சுதந்திரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், போரின்போது சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதி வழங்கப்படுவதிலும் தடைகளைத் தோற்றுவித்துள்ளன. விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்கள் ஆகியவற்றை முன்வைப்பதற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்  என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்துகிறது.

‘புதிய ஆடைக்குள் இருக்கும் பழைய பிசாசு: மீண்டும் அச்சத்திற்குள் திரும்பிய இலங்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது…

நாட்டில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தின்போது நடைபெற்ற குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை அடக்குவதற்கும் இடைக்கால நீதிப்பொறிமுறைகளைத் தடைசெய்வதற்குமான முயற்சிகளின்போது மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள், சட்டத்தரணிகள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தினால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. இது தற்போது விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்போர் மீது அதிகளவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

வெறுமனே அதிகாரிகளை அதிருப்திக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை மற்றும் அத்தகைய கருத்துக்களை வெளியிட்டமை ஆகியவற்றுக்காக அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமை, ஆதாரங்களின்றி தன்னிச்சையாகத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதிலிருந்து சுதந்திரம் பெறல் ஆகியவை உள்ளடங்கலாக சர்வதேச சட்டங்களில் கீழுள்ள கடப்பாடுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தது இந்தியாதான் – டிலான் பெரேரா

18/02/2021 Leave a Comment

“உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்குப் பின்னால் இருந்தது இந்தியாதான்” என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி ‘ஹிரு’ சிங்கள தொலைக்காட்சியில் ‘சலக்குன’ என்னும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோதே பொதுஜன பெரமுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருந்தார்.  

Filed Under: செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் நேற்று பதிவாகியது!

18/02/2021 Leave a Comment

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் நேற்று (17)  பதிவாகியது!  

முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கையாக இருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் 13 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதில்  களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 08 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது

18/02/2021 Leave a Comment

திரிபடைந்த பிரித்தானிய புது கொரோனா வைரஸ் கொலும்பினுள் நுழைந்த பினனர் அது வேகமாக பரவடியக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

இலங்கையில், நேற்றைய தினம் (17) கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 722 பேரில் 223 கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

18/02/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=196

Filed Under: Uncategorized

  • « Previous Page
  • 1
  • …
  • 578
  • 579
  • 580
  • 581
  • 582
  • …
  • 586
  • Next Page »

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.