“உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்குப் பின்னால் இருந்தது இந்தியாதான்” என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ‘ஹிரு’ சிங்கள தொலைக்காட்சியில் ‘சலக்குன’ என்னும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோதே பொதுஜன பெரமுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருந்தார்.


