Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

மொட்டு கட்சி உடன்படிக்கையை மீறிவிட்டது… கட்சித் தலைவரையும் தட்ட முயற்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு

01/03/2021 Leave a Comment

தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் தலைவர் மீது நீதிமன்ற வழக்கு சுமத்தி மேலும் கட்சியின் செயற்பாட்டை மழுங்கடிப்பு செய்யும் முயற்சிகளை மேற்கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களது கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தி புதிய கட்சி தொடங்கினார் என்றும் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, கட்சியை மீண்டும் சரிவுக்கு இட்டுச் செல்லவும் வழிவகுக்கிறார் எனவும்,  அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், தேசிய பட்டியல், இதர பதவிகள் விடயத்தில், வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் தான்தோன்றித் தனமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

Filed Under: செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் வரப்போகிறது – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

01/03/2021 Leave a Comment

மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்  நாளை (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.

மாகாணசபை தேர்தலானது விகிதாசார  முறைமையின் அடிப்படையில்  நடாத்தப்பட வேண்டுமாயின்  அதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட வேண்டும்   எனவும், அவ்வாறு  இல்லையெனில் கலப்பு முறைமையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Filed Under: செய்திகள்

சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடுகிறது – 1000 ரூபாவுக்கு தீர்வு கிடைக்குமா?

01/03/2021 Leave a Comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை இன்று (01) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. 

தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 900 ரூபாவையும், அரசாங்கம் 100 ரூபாவையும் வழங்குவதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று கடந்த 08 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.

அதன் பின்னர், இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக கடந்த 19ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடியது.

எனினும் அன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

இதனால் கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமை காரணமாக குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்தாமல் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

கொரோனா தொற்றினால் மேலும் எழுவர் உயிரிழப்பு…

01/03/2021 Leave a Comment

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 07 பேர் நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

சிறுமியைத் தாக்கி கொலை செய்த பூசகர்

28/02/2021 Leave a Comment

 மீஹகாவத்த – தெல்கொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி 9 வயதுச் சிறுமி ஒருவர் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என தீர்மானித்த பெற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பூசகரும் தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் சிறுமியை தாக்கியதில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுமியை பியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பூசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Filed Under: செய்திகள்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் : போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்

28/02/2021 Leave a Comment

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) 66 நிமிடங்களில் தோற்கடித்து மகுடம் சூடினார்.

அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. முதல் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை 5 ஆட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 19 வயதான ஸ்வியாடெக் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும். தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் ஸ்வியாடெக் இந்த வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

Filed Under: ஆடுகளம்

ஈரானிய ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்…… ஜோ பைடனின் முதல் ராணுவ நடவடிக்கை…

28/02/2021 Leave a Comment

இந்த மாத தொடக்கத்தில் சிரியாவின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப் படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானிய ஆதரவு போராளிகள் குழு ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு சிவில் காண்டிராக்டர் கொல்லப்பட்டார்.  ஒரு அமெரிக்க படை வீரர் மற்றும் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக, பாக்தாத் நகரில்  அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்ட தளத்திலும் ராக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு தான் அமெரிக்க தூதரகம் மற்றும் வேறு சில நாடுகளின் தூதரகங்கள் இருந்தன. அதற்கு பதிலடி தரும் விதமாகவே ஈரானிய போராளிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் ஒருவர்மட்டுமே உயிரிழந்ததாக போராளிகள் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சிரியாவில் நடக்கும் மோதல்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு, குறைந்தபட்சம் 22 பேராவது உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. சமீபத்திய அமெரிக்க தாக்குதல், கிழக்கு சிரியாவை இணைக்கும் இராக்கிய எல்லை அருகே நடத்தப்பட்டுள்ளதாக பெண்டகன் கூறுகிறது.

முறையான ராஜீய ஒத்துழைப்பு மற்றும் கலந்தாலோசனைகளுடன் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. இராக்கில், இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும்குழுவை எதிர்கொள்வதற்காக அங்குள்ள இராக்கிய படைகளுக்கு துணையாக சுமார் 25 ஆயிரம் அமெரிக்க படையினர் உள்ளனர். இர்பில் நகரில் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 11 நாட்கள் கழித்துசிரியா, இராக் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இதுதான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் உத்தரவிட்ட முதலாவது ராணுவ நடவடிக்கை. இந்த ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உளவுத்தகவல்களை பகிர்ந்த இராக்கிய அரசுக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.

டொனால்டு டிரம்பால் முறித்துக் கொள்ளப்பட்ட ஈரானியஅணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்போம் என தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த ஜோ பைடன், அவரது நிர்வாகத்தில் அமைதிவழி தீர்வு க்கு முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தீக்கதிர் 

Filed Under: உலகம்

தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயற்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன் – மயில்வாகனம் திலகராஜ்

28/02/2021 Leave a Comment

“என்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்டபோதிலும், அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயற்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…

“தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை யாப்பு எழுதி நாம் உருவாக்கினோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே, தன்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு,அந்த கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றது.

இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகினேன். இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி, செயற்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலின்  ஊடாக அடைய முயற்சிப்பேன்.” என்றார்.

Filed Under: செய்திகள்

தண்ணிமுறிப்பு விவசாய நிலங்கள் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமாம் – விவசாயிகள் விரட்டப்படுகின்றனர்.

28/02/2021 Leave a Comment

தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை சமப்படுத்தும் வேலைகளில் குறித்த காணி உரிமையாளர் நேற்றையதினம் ஈடுபட்டிருந்தவேளை, அவ்விடத்துக்கு வருகைதந்த பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இவ்விடம் அனைத்தும்  குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் புராதன பூமி என தெரிவித்ததோடு, 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி இங்கு இந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாது இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை என தெரிவித்துள்ளதோடு, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினரை அழைத்து காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அத்தோடு,  காணியை மீண்டும்  துப்பரவு செய்யமுடியாது என தெரிவித்து தடை விதித்து சென்றுள்ளதோடு காணி உரிமையாளரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த பிரதேசம் என்பதோடு போருக்கு பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றார்கள். 

இந்த காணிகளில் வேலிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கிளிசறியா மரங்கள் நடப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளதும் மக்களின் காணிகளில் மா ,பலா , தென்னை , போன்ற மரங்கள் கூட இன்றும் நிற்பதை காணமுடிகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குருந்தூர் மலையில் இராணுவம் , தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருந்த நிலங்கள் ,விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக நேற்று இந்த நடவடிக்கையில் பௌத்த தேரர் தலைமையிலானோர் ஈடுபட்டுள்ளமை கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுமையும் குறிப்பிடதக்கது.

கிராம மக்கள் பத்திரிகை நிருபர்களை தொடர்புகொண்ட பின், அங்கு சென்ற பத்திரிகை நிருபர்களின் ஊடக அடையாள அட்டை விபரங்களும் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

Filed Under: செய்திகள்

மண் அகழ்வுகளை உடனடியாக நிறுத்துக – மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை

24/02/2021 Leave a Comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

சட்ட விரோதமான முறையில் அதிகளவான மண் அகழப்படுவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 594
  • 595
  • 596
  • 597
  • 598
  • …
  • 608
  • Next Page »

Recent Posts

  • கிரியல்லவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது – மனோ கணேசன் காட்டம்
  • யுத்தத்துக்கு மத்தியில் ஷிரந்தி நடத்திய நிதி மோசடி அம்பலம்!
  • பிள்ளையான் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!
  • யோஷித, கரநாபொடைக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு!
  • சிராந்தி ராஜபக்ச எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.