இலங்கை அதிபர் சேவை தரம் 1 – 2 மற்றும் 3 க்கு சுமார் 4600 வெற்றிடங்கள் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும். இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு தெரிவு செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் பலர் தொடர் போராட்டம் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
