இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் நேற்று (17) பதிவாகியது!
முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் 13 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதில் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 08 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


