Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

சங்கத்தலைவன் பெப்ரவரி 26 ரிலீஸ்…

14/02/2021 Leave a Comment

பாரதிநாதன் அவர்களின் எழுத்தில் வெளியான தறியுடன் என்னும் நாவல் சங்கத்தலைவன் திரைப்படமாக எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி வெளிவருகிறது.

மணிமாறன் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, சுனு லக்ஸ்மி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

https://www.facebook.com/lankatruthtamil/posts/107910307994142

Filed Under: வீடியோ

வவுனியா நகரசபைத் தொழிலார்கள் போராட்டத்தில்…

14/02/2021 Leave a Comment

வவுனியா நகரசபையானது தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியான நடவடிக்கைகளைக் கண்டித்தும் நீதிகோரியும் இன்று (12) புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இப்போராட்டத்தில், ” நகரசபைத் தலைவரே! தொழிலாளர்களை சாதி சொல்லித் திட்டுவது சரியா?”, “தொழிலாளர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்”, ” நகரசபை நிர்வாகமே ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்கு”, “மாதாந்தம் ஒவ்வொரு ஊழியரும் 3000/=, 4000/=, 5000/= என இழந்து வருகிறார்கள். இது சரியா?”, “நகரசபை நிர்வாகமே !பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்கு” என்ற பல கோஷங்களை முன்னிறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் செய்கின்றனர்.

Filed Under: செய்திகள்

ராஜபக்ஷகளுக்கு உச்சா போகும்போது முஸ்லிம்கள் தான் கட்டிக் கல்…

14/02/2021 Leave a Comment

“மறு பேச்சுக்கு இடமில்லை, கொவிட் மரணங்களுக்கு தகனம் மட்டும் தான்” என ராஜபக்ஷகள் வாய்ச் சொல் வீசி எச்சில் காயும் முன்னர் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அடக்கத்துக்கு அனுமதி வழங்குவதாக பாராளுமன்றத்தில் கூறிவிட்டார்.

கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்காத உலகின் ஒரேயொரு நாடு இலங்கை. ராஜபக்ஷகளின் முன்மாதிரி நாடான சீனாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி உண்டா இல்லையா என அறியக் கிடைப்பதில்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை, உலக சுகாதார அமைப்பு (WHO), இலங்கையின் நிபுணத்துவக் குழுவின் இரண்டு அறிக்கைகள் என அனைத்தும் கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதனால் தீங்குகள்; ஆபத்துக்கள் இல்லை எனக் கூறியிருந்தபோதிலும் ராஜபக்ஷகள் தமது மடமைக் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

மேலும் ராஜபக்ஷகளின் போராளிக் குழுக்களான தீவிரவாத பிக்குகள் கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்தால் அரசாங்கத்தையும் சேர்ந்து புதைத்துவிடுவதாக மஞ்சள் அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அச்சுருத்தினர்.

ராஜபக்ஷகளின் இழி ஊடகங்களும் ஒத்து ஊதி இக் கருத்தை சமூகமயப்படுத்துவதில் நேரத்தை செலவிட்டன.

தற்போது, திடீரென ராஜபக்ஷகள் அடக்கத்துக்கு அனுமதி அளிப்பதாகக் கூறுகின்றனர்.ஏன் ? பல காரணங்கள் உள்ளன.

அதிலொன்று: P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரை தமிழ் முஸ்லிம் பேரணியாகும். மரணிக்கும் தமது மக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காத ராஜபக்ஷகளின் தான்தோன்றித்தனத்தினால் முஸ்லிம் சமூகம் ஓன்று திரண்டு பேரணியில் கலந்துகொண்டது. இதற்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் அரசில்வாதியோ மத குருவோ மறுப்பு கூறவில்லை. ராஜபகஷைகள் இதற்கு பயந்தனர் …!

இரண்டாவது:எதிர்வரும் 22 ஆம் திகதி ஜினீவாவில் ஆரம்பிக்கும் ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 46 ஆம் அமர்வுக்கு இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் சமர்ப்பித்துள்ள நீளமான அறிக்கையில் பலவந்த பிரேத (ஜனாஸா) தகனத்தை கண்டித்துள்ளார்.

இவ் அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும் இலங்கை தொடர்பான முன்மொழிவில் பலவந்த தகனத்தை கண்டிக்கும் பந்தியொன்று இணைக்கப்படவுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பமொன்றில் வாக்குரிமை பெற்ற முஸ்லிம் நாடுகள் குறைந்த பட்சம் வாக்களிக்காமல் தவிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!

மூன்றாவது:இலங்கையில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உறவினர்கள் ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்து இடைக்கால சலுகையொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.

இக் கோரிக்கையை பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்சிலும் விருதுபெற்ற பிரித்தானிய சட்ட நிறுவனமான பிண்டாமாக்ஸும் இணைந்து முன்வைத்துள்ளன.ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!

இறுதியாக:பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பலவந்த தகனத்தை நிறுத்தவில்லை என்றால் தான் இலங்கைக்கு விஜயம் செய்வதில் கஷ்டமான நிலையொன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளின் பேரவையில் (OIC) பிரதான இடம் வகிக்கும் நாடு, பாகிஸ்தான். இஸ்லாமிய நாடுகளின் பேரவை பலவந்த தகனத்தை கண்டித்து இதுவரை இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!

கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியது இதனால்தான். முஸ்லிம் விரோத பிக்குகள் திக்கு முக்காடி நிற்கின்றனர்.

வாய் வீச்சுக்கு பதிலாக அரசியல் உச்சா போக ஆரம்பித்துள்ளது.ராஜபக்ஷகளுக்கு உச்சா போகும்போதெல்லாம் கட்டிக் கல்லாக பிடிப்பது முஸ்லிம்களைத் தான்.

மூலக்கட்டுரை (சிங்களம்): Sri Lanka Brief வலைத்தளம் (2021.02.10) தமிழாக்கம்: Hisham Hussain Puttalam

Filed Under: கட்டுரைகள்

மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !

14/02/2021 Leave a Comment

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை பேசப்படும் இந்தியா உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீட்டுப் பட்டியலில் 53-ம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

சர்வதேச ஆய்வு நிறுவனமான ”தி எக்கனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்” என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நாடுகளின் ஜனநாயகத் தன்மையை பரிசீலித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீட்டு தரப் பட்டியலில் முதலிடத்தை நார்வே பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை முறையே ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

Filed Under: உலகம்

பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை

14/02/2021 Leave a Comment

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு விமர்சித்திருக்கிறது.

சீன அரசின் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பிபிசி தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.

Filed Under: உலகம்

பிளவுபடுமா முற்போக்கு கூட்டணி – ராதா தனி வழியா?

14/02/2021 Leave a Comment

மலையக மக்கள் முன்னணியின் அண்மைக்கால செயற்பாடுகளினால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை, முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்திய நிர்வாகக்குழு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைத்தும் இன்னும் அது செயற்படுத்தப்படவில்லை எனவும் மற்றும் சம்பள உயர்வு போராட்டத்துக்கான ஆதரவையும் மலையக மக்கள் முன்னணி தன்னிச்சையாக வெளியிட்டதாலும் தமிழ் முற்போக்கு கூட்ட்டணிக்குள் முறுகல்நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

Filed Under: செய்திகள்

தேர்தலை வெற்றிபெற்ற பின் அரசாங்கம் கொரொனா தடுப்பைக் கைவிட்ட விதம் இதோ…

14/02/2021 Leave a Comment

கடந்த பொதுத் தேர்தல் வரை இந் நாட்டில் கொரொனா பரவுதல் பாரியளவில் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் மீது கொரொனா கட்டுப்படுத்தலின் முழுப் பொறுப்பைச் சுமத்திவிட்டு அரசாங்கம் கைகழுவிக் கொண்டதனால் இன்று நாட்டுக்குள் மிக பயங்கரமாக கொரொனா வைரசு பரவியுள்ளது.

பெப்ரவரி 08 ஆகும்போது வைரசு தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 எல்லையைக் கடந்திருந்ததுடன், 2020 பெப்ரவரி 15 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இந் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஆகஸ்டு 05 பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2,839 ஆக இருந்தது. அன்றிலிருந்து ஒக்டோபர் 30 ஆகும்போது தொற்றாளர் எண்ணிக்கை 10,000 எல்லையை தாண்டியதுடன் சுமார் மூன்று மாத காலத்துக்குள்; பொதுத் தேர்தலின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை 7,585 இனால் அதிகரித்துள்ளது.

தொற்றாளர் எல்லை 10,000 தாண்டிய் நாட்கள் பின்வருமாறு2020 பெப்ரவரி 15 முதல் 2020 ஒக்டோபர் 30 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,242 ஆகுவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 257.

ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 22 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 23. இக் காலப் பகுதிக்குள் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,747.நவம்பர் 22 முதல் டிசம்பர் 09 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 30,072 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,901.டிசம்பர் 09 முதல் டிசம்பர் 26 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 40,380. எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவானவர்களின் எண்ணிக்கை 10.308.

டிசம்பர் 26 முதல் 2021 ஜனவரி 13 வரை 50,229 ஆனது. எடுத்துக்கொண்ட நாட்கள் 18. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,849.

ஜனவரி 13 முதல் 27 வரை 60,694. எடுத்துக்கொண்ட நாட்கள் 14. பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 10,465.

ஜனவரி 27 முதல் பெப்ரவரி 11 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73,166. எடுத்துக்கொண்ட நாட்கள் 15. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 12,472 ஆகும்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 584
  • 585
  • 586

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.