Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

கொழும்புத் துறைமுகத்தின் மிகப்பெரிய முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவோம் – வெளிவிவகார அமைச்சரே சாட்சி

15/02/2021 Leave a Comment

கொழும்புத் துறைமுகத்தின் பிகப்பெரிய முனையமான மேற்கு முனையைத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தியாவின் NEWS 18 தொலைக்காட்ட்சி அலைவரிசையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் கொள்கலன் நடவடிக்கைகள் இம்முனையத்தில் இடம்பெறுவதாக நாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

இறக்குவானையில் வங்கியொன்று மூடப்பட்டது…

15/02/2021 Leave a Comment

இறக்குவானை நகரில் உள்ள அரச வங்கியின் பணியாளருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வாங்கி இன்று  முதல் (15) மூடப்படுகிறது.

கோடகவலை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகம் இது தொடர்பில்,
பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தது.

Filed Under: செய்திகள்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 249 ஓட்டங்களால் முன்னிலை…

15/02/2021 Leave a Comment

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்த போது மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணி முதல் இன்னிங்சில் 95.5 ஓவர்களில் மொத்தமாக 329 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்களில் 134 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்நது.

195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது.

இன்று 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய அணி இதுவரை 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: ஆடுகளம்

இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு: சி.வி.விக்னேஸ்வரன்

15/02/2021 Leave a Comment


ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.


முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுஎனது கருத்து.


தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின்ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது. எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.
எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.


இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது. அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.


– தினக்குரல் செய்திகள் 

Filed Under: செய்திகள்

பாடசாலைச் சென்ற முதல் நாளில் லொறிக்கு பலியாகியச் சிறுவன்… பதுளையில் துயரசம்பவம்…

15/02/2021 Leave a Comment


இவ்வாண்டில் இன்று (15) ஆரம்பமான முதலாம் தர வகுப்பில் சேர்வதற்காக தனது பாட்டியுடன் பாடசாலைக்குச் சென்ற 06 வயது சிறுவன் மீது லொறி மோதியதில் குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் சென்ற சிறுவனின் பாட்டி படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.


பதுளை, அசேலபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வருண் பிரதீப் என்ற சிறுவனே இவ்வாறு அகாலமரணம் அடைந்துள்ளார். பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 இல் சேர்வதற்குச் சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Filed Under: செய்திகள்

1000 ரூபாவுக்கு என்னவாகும்? சம்பள நிர்ணய சபையின் திட்டத்தை வர்த்தமானியில் வெளியிட மேலும் 02 வாரங்கள்…

15/02/2021 Leave a Comment


தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மேலும் இரு வாரகாலம் செல்லும் என்றும், அதுபற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (15) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என்றும்  தொழில் ஆணையாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


அவர் மேலும்..

இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக சம்பள நிர்ணய சபை இந்த வார இறுதியில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

ஒருபோது நாட்டை மூடமாட்டோம் – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

15/02/2021 Leave a Comment

வேகமாகப் பரவிச்செல்லும் புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக நாட்டை ஒருபோதும் மூடப்பபோவதில்லை என்று இராஜாங்க அமைச்சர்  சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

‘மவ்பிம’ சிங்கள மொழிப் பத்திரிகையிடமே அவர் மேற்கண்டவாறும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் நாட்டை மூடமாட்டோம். ஆனால், விரைவில் சில பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்போகிறோம். அதுபற்றிய விசேட கலந்துரையாடல் இன்று (15) சுகாதாரத் தலைவர்களுடன் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Filed Under: செய்திகள்

உலக இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு 03 வெள்ளிப்பதக்கங்களும் 03 வெண்கலப்பதக்கங்களும் வசம்…

15/02/2021 Leave a Comment

உலக இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (Paralympic Games) திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கங்கள் 03 ஐயும், வெண்கலப்பதக்கங்கள் 03 ஐயும் இலங்கை அணி வென்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இப்போட்டி நேற்றைய தினம் (14) நிறைவடைந்தது.

Filed Under: ஆடுகளம்

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி?

15/02/2021 Leave a Comment

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் நேபாளத்தில் கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் கட்சியை ஆரம்பித்த பின்னர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியை உலகளாவிய கட்சியாக மாற்றும் நோக்கத்தில் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

இலங்கை என்ற நாட்டின் பெயரை ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்ற வேண்டும் – உதய கம்மன்பில

15/02/2021 Leave a Comment


உத்தேச புதிய அரசியலமைப்பில் இலங்கையின் பெயர் ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்றப்பட வேண்டும். நாட்டின் ஆட்சி முறைமைய ஒற்றையாட்சி என்பதை அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதிகளிலும் மிக தெளிவாக குறிப்பிடுதல் அவசியமாகும். இல்லாவிடின் ஒரு தரப்பினர் சொற்பதங்களை கொண்டு வாதப் பிரதிவாதங்களை முன்வைப்பார்கள் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் பிவிதுறு ஹெல உருமய கட்சி முன்வைக்கும் யோசனைகளை  வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று  முன்தினம் (13) பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன…

  • அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதியில் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆங்கில மொழியிலும் அவ்வாறான தன்மையே காணப்பட வேண்டும். சொற்பதற்களை கொண்டு இன்றும் ஒரு தரப்பினர் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு அல்ல என்று வாதிட்டுக் கொள்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அழிக்கும் பொறிமுறை புதிய அரசியமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
  • பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை முன்னெடுக்கும் நாடுகளை காட்டிலும் இலங்கையின் பௌத்த மதம் பழமையானதாக காணப்படுகிறது. 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட கால பின்னணியை இலங்கையின் பௌத்த மதம் கொண்டுள்ளது. ஆகவே பௌத்த மதத்தை பிரதான அரச மதமாக அங்கிகரித்து பிரகடனப்படுத்த வேண்டும். பௌத்த மதத்தை பாதுகாத்தல், வளர்ச்சி பெற  செய்தல் ஆகியவற்றுக்கு அரசியமைப்பின் ஊடாக விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.செயற்படுத்தப்படும் விடயங்களை கண்காணிக்க விசேடநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
  • தேவையற்ற செலவினை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தல் முறைமை காணப்படுகிறது. ஜனாதிபதி பாராளுமன்றில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்  பிரதம வேட்பாளரை அறிவிக்கும் வகையில் தங்களின் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்க வேண்டும்.பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்ற கட்சி தாம் அறிவித்த ஜனாதிபதி  வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்துக் கொள்ளாம். 
  • ஒருவர் இரண்டு தடவை மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று  19 ஆவது திருத்ததிலும், 20 ஆவது திருத்தத்திலும் காணப்படும் தடை புதிய அரசியமைப்பில் நீக்கப்பட வேண்டும்.
  • மாவட்ட மட்டத்தில் உள்வாங்கப்படும் தெரிவு முறைமை நீக்கப்பட்டு தேசிய மட்டத்திலான தெரிவு முறைமை உள்வாங்கப்பட வேண்டும். 

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 582
  • 583
  • 584
  • 585
  • 586
  • Next Page »

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.