ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று (11) காலை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே சி.ஐ.டி.யினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.