Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்

21/02/2021 Leave a Comment

உலகம் முழுவதும் 2020இல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் (organized crime), ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் களச்செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்றேக் குறைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில்  53 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் போர் நடக்காத இடங்களில் 68 விழுக்காட்டினர் கொல்லப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.  2016 லிருந்து 10 ல் நான்கு பேர் மட்டுமே போர் நடக்காத சூழலில் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்த போக்கு புதியதாக இருக்கிறது.  2019 ம் ஆண்டின் 63 விழுக்காட்டை ஒப்பிடும் போது, 2020 ல் 84 விழுக்காடு ஊடகவியலாளர்கள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

மெக்ஸிகோ வழக்கம் போல ஊடகத்துறையினருக்கு கொலைகளமாக இருக்கிறது. அங்கு, குறைந்தது 8 ஊடகத்துறையினராவது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் 6 ஊடகத்துறையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

நன்றி: வினவு 

Filed Under: உலகம்

உலகில் முதல் முறையாக படமெடுக்கப்பட்ட மஞ்சள் நிற பென்குயின்

21/02/2021 Leave a Comment

அண்டார்ட்டிகா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவை ஆய்வாளர் ஒருவர் ஆவணப்படம் எடுத்துள்ளார். அப்போது அங்கு மஞ்சள் நிறத்திலான பென் குயின் ஒன்றைக் கண்டார். மஞ்சள் நிற பென்குயினுடன் வழக்கமான வண்ணமுடைய எம்பரர் பென் குயின் ஒன்றும் உலா வருவதை பார்த்த அவர் இரண்டையும் படம் பிடித்துள்ளார்.

மற்ற உயிரினங்களில் உள்ள அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப்போல முதல்முறையாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

பாக்கிஸ்தான் பிரதமர் நாளை இலங்கை விஜயம்

21/02/2021 Leave a Comment

இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை (22)  பிற்பகல் 04.30 மணிக்கு இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

இவ்வருடத்தில் இலங்கைக்கு வருகை தருகின்ற முதலாவது அரச தலைவர் இவராவார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவால் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்கப்படவுள்ளார்.

அன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

Filed Under: செய்திகள்

தம்முடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை பொதுஜன பெரமுன நிறைவேற்ற தவறிவிட்டது – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனம்

21/02/2021 Leave a Comment

தம்முடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை பொதுஜன பெரமுன நிறைவேற்ற தவறிவிட்டதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனம் வெளியிட்டது.

ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மூன்று ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் இரண்டு மாகாண ஆளுநர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது மிகப் பெரியளவில் ஊழல், மோசடிகள் நடக்கின்றன. காணிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. உறவினர்கள், நண்பர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

21/02/2021 Leave a Comment

6 மாதங்களில் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன  தெரிவித்தார். 

இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றுக்கான விமானப் பயணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கலாநிதி பாலித கோஹன சுட்டிக்காட்டினார். 

Filed Under: செய்திகள்

திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்று தீவிரம்… எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது…

21/02/2021 Leave a Comment

நாட்டில் மேலும் 543 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் (20) அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.


இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.


அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக உயர்ந் துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நியாயத்துக்கு எதிராகப் பயணிக்கின்றன – ராதிகா குமாரசுவாமி

21/02/2021 Leave a Comment


ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நியாயத்துக்கு எதிராகப் பயணிக்கின்றன என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இராஜதந்திர அதிகாரியும், சட்டத்தரணியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கத்துக்கு பின்வரும் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார

“அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக அன்மையில் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரனை ஆணைக் குழு பற்றி சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். இந்த அறிக்கைகளில் ஒன்றுக்கொன்று முரணான மூன்று விடயங்கள் உள்ளன.

முதலாவது : இந்த அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஆணைக் குழுவினால் தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளை நீக்குமாறு பணிப்புரை வழங்கியிருக்கின்றது. ஆணைக் குழுவொன்று இவ்வாறான ஒரு செயலை செய்த உலகின் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இது உண்மையாகவே கடும் இருளடைந்த கற்பனையின் வெளிப்பாடு. இதன் பெறுபேறாக லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னெலிகொட, கரன்னாகொட, ஜாலிய விக்கிரமசூரிய போன்ற சம்பவங்களுடன் தொடர்புபடும் வழக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும். எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதி விடுதலை செய்யப்படுவார்கள். இது மிகவும் அசாதாரண நிலை.

இரண்டாவது : அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த நபர்களை விடுதலை செய்வதற்கு மட்டுமல்ல சாட்சிகளை சோடித்ததாக பொலிஸ் விசாரனை அதிகாரிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கவும் உள்ளது. இந்த வழக்குகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள, நாட்டின் பிம்பத்துடன் தொடர்புபடும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகும். இவ்வாறு தண்டனை பெறாமல் இருக்க இயலுமாகுதல் சட்டத்தின் ஆட்சியின் பார்வையில் இருளை நோக்கி பயணிப்பதாகும்.

மூன்றாவது : அரசியல் தலைவர்களின் குடியுரிமையை ஒழிப்பதற்காக விசேட ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 1977 இல் திருமதி பண்டாரநாயகவுக்கும் இவ்வாறு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினராக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் (SLFP) சிவில் சமூகத்துடன் இணைந்து இந்த ஆணைக்குழுவுக்கு எதிராக எழுந்து நின்றன. ஒன்றாகக் குரல்கொடுத்தன. மேற்றிராணியார் லக்‌ஷ்மன் விக்கிரமசிங்க தனது பிரபலமான கடிதத்தின் மூலம் ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என ஜே.ஆரிடம் வேண்டினார். அரசியல் எதிரிகளை நிராகரிப்பதற்காக போலியான சட்ட நிருவாக வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரியிருந்தார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவும் அதன் கீழ் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவும் உண்மையில் நியாயத்துக்கு எதிராகப் பயணிப்பதாகும். சட்டத்தின் தலைக்கு மேல் அவை ஏறி நிற்கின்றன.


இவ் ஆணைக்குழுக்கள், சட்டத்தின் ஆட்சியை உண்மையாக நம்புகின்ற; மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கருதுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பயங்கரமான கனவு (Nightmare) ஆகும்”.

Filed Under: செய்திகள்

எமது அரசியல் குடியுரிமை என்ற கடதாசியில் தங்கியிருக்கவில்லை – அநுர குமார திஸாநாயக்க

19/02/2021 Leave a Comment

“எமது அரசியல் குடி உரிமை என்ற கடதாசியில் தங்கியிருக்கவில்லை. ஆனால் அநீதமாக, தான்தோன்றித்தனமாக, ஊழலான முறையில் குடியுரிமையை அழிக்க ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முயற்சியை நிச்சயமாக தோல்வியடையச் செய்வோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக நேற்று (2021.02.18) ஹைட்பார்க் மைதானத்தில் கூறினார்.

விசித்திரமான ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக “ஜனநாயத்துக்கான மக்கள் இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் சூழல் பாதிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஊழல்; மோசடி, தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் என ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷவின் பெரும் முயற்சி தன்னுடையதும் தனது நண்பர்களுடையதும் வழக்குகளை நீக்கிக்கொள்ளுவதாகும். அதற்காக ஓர் ஆணைக்குழுவை அமைத்தார்.
ஆணைக் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன. அவருடைய ஊழல்கள் தொடர்பாக புத்தகங்களில் பக்கம் பக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் நீதிமன்ற ஊழல் குற்றவாளி என அவற்றில் எழுதப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு செவிமடுக்காமல் தனது நண்பர்களுக்குத் தேவையான விதமாக வழக்கு(த் தீர்ப்புக்)களை எழுதியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக்கொண்ட குழுவொன்று இவர் ஊழல் செய்தவர் என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு கட்டாய விடுமுறையில் அனுப்பி ஓய்வுபெறச் செய்தது.
இந்த ஆணைக்குழுவின் இன்னுமொரு உறுப்பினர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பிரனாந்து. உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில அடிப்படை உரிமை மீறல் குற்றவாளியாக தீர்ப்பு செய்யப்பட்டு, அந்தக் குற்றத்துக்காக தனது சொந்த பணத்தில் ஓர் இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியேற்பட்டது.

இவ்வாறான ஊழல் பேர்வழிகளைக்கொண்ட ஆணைக்குழு ஒன்றுக்கு எங்களை விசாரிப்பதற்கு அல்ல; எங்களை அழைப்பதற்குக் கூட தார்மீக உரிமை கிடையாது” என்றும் அவர் மேலும் கூறினார்.


இப் பேரணியில் வலஸ்முல்லை நைகல விகாராதிபதி வகமுல்லே உதித தேரர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார, கலைஞர் ஜகத் மனுவர்ண, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சரோஜா சாவித்திரி போல்ராஜ், பேராசிரியர் விஜயகுமார், ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மஹிந்த ரத்நாயக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் அசோக பீரிஸ், மவிமு பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் உரையாற்றினார்கள்

Filed Under: செய்திகள்

எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க நாம் உடன்படவில்லை – இந்தியா கூறுகிறது.

19/02/2021 Leave a Comment

திருகோணமலை எண்ணெய் குதங்களை மறுபடி இலங்கைக்கு கைமாற்ற தாம் இணங்கவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா உடன்படுகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியதாக அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார். 

ஆனால், இந்திய அரசாங்கம் எண்ணெய் குதங்களைப் பற்றி தாம் மேலும் கலந்துரையாடுவதாகத்  தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் அதனை மீளப்பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 

“இந்திய அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கையிடம் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை.” என்று ‘இந்திய நியூஸ் ஏசியா’ இணையத்தளம் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தது. 

2003ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய IOC நிறுவனத்திற்குத் தாரைவார்த்தது. அன்றுமுதல் இன்றுவரை அது இந்திய அரசாங்கத்திடம் இருக்கிறது.

Filed Under: செய்திகள்

இந்தியாவின் தடுப்பூசிகளை திருப்பி அனுப்பும் தென்னாப்பிரிக்கா? குறைந்த தீர்வே தருவதால் எங்களுக்கு வேண்டாம்..!

19/02/2021 Leave a Comment

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா தனது நாட்டில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி சமீபகாலமாக பெருமைபேசி வந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தங்களுக்கு வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க நாடு திரும்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கடந்த வாரம்தான், இந்தியாவிலிருந்து சீரம் நிறுவனத்தின் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இந்த தடுப்பூசி பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதனை சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முன்பாக அவற்றை தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது, தங்கள் நாட்டில் பரவி வரும் மரபணு மாற்றம் அடைந்த புதியவகை கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்குவதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த தென்னாப்பிரிக்கா, இந்த தடுப்பூசிகளை நீங்களே திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியாவின் சீரம் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை சீரம் நிறுவனத்தின்  பூனாவல்லா மறுத்துள்ளார்.

Filed Under: உலகம், கொவிட்-19 செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 581
  • 582
  • 583
  • 584
  • 585
  • …
  • 591
  • Next Page »

Recent Posts

  • இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு சர்வதேச வெற்றி!
  • மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகளைப் பரிந்துரைத்தார் ஜனாதிபதி!
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு – தண்டனை விபரம் பின்னர்!
  • மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திலகசிரி பெரேரா கைது!
  • சாமர சம்பத்தின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.