2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்

journalists killed 21.02.2021

உலகம் முழுவதும் 2020இல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் (organized crime), ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் களச்செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்றேக் குறைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில்  53 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் போர் நடக்காத இடங்களில் 68 விழுக்காட்டினர் கொல்லப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.  2016 லிருந்து 10 ல் நான்கு பேர் மட்டுமே போர் நடக்காத சூழலில் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்த போக்கு புதியதாக இருக்கிறது.  2019 ம் ஆண்டின் 63 விழுக்காட்டை ஒப்பிடும் போது, 2020 ல் 84 விழுக்காடு ஊடகவியலாளர்கள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

மெக்ஸிகோ வழக்கம் போல ஊடகத்துறையினருக்கு கொலைகளமாக இருக்கிறது. அங்கு, குறைந்தது 8 ஊடகத்துறையினராவது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் 6 ஊடகத்துறையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

நன்றி: வினவு 

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்