திருகோணமலை எண்ணெய் குதங்களை மறுபடி இலங்கைக்கு கைமாற்ற தாம் இணங்கவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா உடன்படுகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியதாக அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்திய அரசாங்கம் எண்ணெய் குதங்களைப் பற்றி தாம் மேலும் கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் அதனை மீளப்பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
“இந்திய அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கையிடம் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை.” என்று ‘இந்திய நியூஸ் ஏசியா’ இணையத்தளம் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தது.
2003ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய IOC நிறுவனத்திற்குத் தாரைவார்த்தது. அன்றுமுதல் இன்றுவரை அது இந்திய அரசாங்கத்திடம் இருக்கிறது.










