Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

அமெரிக்காவில் 6 கால்கள் 2 வால்களுடன் பிறந்த நாய் குட்டி

24/02/2021 Leave a Comment

அமெரிக்காவில் ஆச்சரிய மூட்டும் வகையில் 6 கால்களுடன் ஒரு நாய் குட்டி பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் 6 கால்கள், 2 வால்கள், மற்றும் 2 இனப்பெருக்க உறுப்புடன் நாய்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஸ்பின்னா பிபின்டா என்ற தண்டுவட பாதிப்புடன் இந்த நாய்க்குட்டி பிறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே 6 கால்களுடன் நாய்க்குட்டி பிறந்து உயிருடன் இருப்பது இந்த நாய்குட்டியாகத்தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நாய்க்குட்டி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

Filed Under: உலகம்

37 தொழிலாளர்கள் படுகொலை – ஈரான் கொந்தளிப்பில்…

24/02/2021 Leave a Comment


சரவான் நகரில் காவல்துறையினர் 37 தொழிலாளர்களை படுகொலை செய்ததை தொடர்ந்து, மக்கள் கிளர்ந்தெழுந்து அந்நகரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.


சில இடங்களில் ஆயுதமேந்திய மக்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்கு தயாராகின்றனர்.

Filed Under: உலகம்

சமையல் எரிவாயுவிலை அதிகரிக்கப்படும் (?)

24/02/2021 Leave a Comment

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அதனை இறக்குமதி செய்யும் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு, அந்நிய செலாவணி வீதம், ஏனைய செலவுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், தங்கள் நிறுவனத்திற்கு மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

Filed Under: செய்திகள்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்வதற்கான சாத்தியம்

24/02/2021 Leave a Comment

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Filed Under: செய்திகள்

ஜனாஸாக்கள் தகனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – காலி முகத்திடலில் குவிந்தனர் முஸ்லீம் மக்கள்

23/02/2021 Leave a Comment

கோவிட் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாஸா எரிப்புக்கு பிரதமர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.  

இன்று (23) பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. பெருமளவிலான முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் பிரமுகர்ககள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Filed Under: செய்திகள்

நெல் விவசாயிகளை அச்சுறுத்த வேண்டாம்

23/02/2021 Leave a Comment


உள்நாட்டு நெல் விவசாயிகளுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து, உரம் இலவசமாக வழங்குவதை நிறுத்துவதாக அச்சுறுத்தி நெல் அறுவடையைப் பெற்றுக்கொள்ளும் முறையை உடனடியாக மாற்றியமைத்து நியாயமான பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் வலியுறுத்துகின்றது.


இச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருனாரத்ண தம்புள்ளை நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றும்போது, “விவசாயிகள் அரசுக்கு நெல்லை வழங்க மறுப்பதன் பின்னணியின் பிரச்சினையொன்று உள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “இதற்கு முன்னர் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும்போது நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் இப் பிரச்சினை விவசாயிகளுக்கு ஏற்படுவதற்குக் காரணமாகும். உடனடியாக இப் பிரச்சினைக்கு விவசாயிக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து நெல் கொள்வனவை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் கூறினார்.


ஜனநாயக நாடொன்றில் விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு; பலவந்தப்படுத்துவதற்கு உரிமை இல்லை என்றும், தற்போது நாட்டரிசி நெல் கிலோ ரூ. 50.00 க்கும், சம்பா நெல் கிலோ ரூ. 52.00 க்கும், ஈர நிறை அகற்றிய நெல்லுக்கு விலை உள்ளது என்றும் கீரி சம்பாவுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நாமல் கருனாரத்ண, ஈர நிறை நீக்காத நெல்லுக்கு ரூ. 44.00 விலை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். தற்போது தனியார் வர்த்தகர்கள் ஈர நிறை நீக்காத நெல்லுக்கு ரூ. 46.87 வழங்குவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 2.87 நட்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இதுவும் அரசுக்கு நெல்லை வழங்காமலிருப்பதற்கு காரணமாகும் என்று அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருனாரத்ண சுட்டிக்காட்டினார்.


இவ் ஊடக மாநாட்டின்போது அகில இலங்கை விவசாயிகள் சம்மேளத்தின் செயலாளர் டி.பி. சரத் கருத்துக்களை தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது – அநுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

23/02/2021 Leave a Comment

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என மக்கள் விடுதலை முன்னையின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமனற்ற உறுப்பினருமான அநுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இரு விடயங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர் என தெரிவித்த அவர்,

எச்சரிக்கை கிடைத்த நிலையிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியது யார் என்பதை முதலாவதாக மக்கள் அறிய விரும்புகின்றனர். இரண்டாவதாக, தற்கொலை குண்டுதாரிகளின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டதுடன், இந்த கேள்விக்கு அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் மறைக்கமுயல்வதாக தெரிவித்துள்ள அநுரகுமார திசநாயக்க கிராமத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தும் முறை குறித்தும் குறிப்பிட்டார்.

காட்டில் பொறிவைத்து விலங்குகளை வேட்டையாடியவர்களைப் பிடிக்க, கொல்லப்பட்ட விலங்கினை தனது தோளில் சுமந்து சென்ற நபரை பொலிஸார் தேடுவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு வேட்டை என கருதினால் தாக்குதல் இடம்பெற்று ஒன்றரை வருடங்களின் பின்னரும் வேட்டையாடப்பட்ட விலங்கை தூக்கி சுமப்பவர்கள் யார் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தினார்கள். நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு யார் பயன்படுத்தினார்கள் எனவும் நாங்கள் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்பது குறித்து அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்குள்ளது அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள் காணாமல்போகச் செய்வதில் வல்லவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவு

23/02/2021 Leave a Comment

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி பனிப்பாறை பெயர்ந்ததால் எதிர்பாராத விதமாக பெரும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தபோவன் பகுதி தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டனர்.  தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 206 பேரில் 70  பேரின்  உடல்கள் மீட்கப்பட்டது. 29 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. எஞ்சிய 136 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. 

நன்றி : தீக்கதிர் 

Filed Under: உலகம்

நாடு பொருளாதார நெருக்கடியில் – தயாசிறி ஜயசேகர

23/02/2021 Leave a Comment

டொலர் மூலமான பாரிய நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்கிறது. 2014இல் 135 ரூபாவுக்கு இருந்த டொலர் பெறுமதி தற்போது 200  ரூபாவை மீறுமளவிற்கு மோசமடைந்துள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“டொலர் இருப்புகளை அதிகரிப்பதால்தான் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த முடியும். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த உண்மையை அரசாங்கம் மக்களிடம் சொல்லவேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

தடுப்பூசி வழங்கள் வேலைத்திட்டம் ஒழுங்கற்றுப் போயுள்ளது – GMOA

23/02/2021 Leave a Comment

மரணம் மற்றும் சிக்கல்க்லைத் தவிர்க்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி வழங்கள் வேலைத்திட்டம் இதுவரையில் அமைப்பு ரீதியாக இயங்காது ஒழுங்கற்றுப் போயுள்ளதாக அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 579
  • 580
  • 581
  • 582
  • 583
  • …
  • 591
  • Next Page »

Recent Posts

  • இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு சர்வதேச வெற்றி!
  • மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகளைப் பரிந்துரைத்தார் ஜனாதிபதி!
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு – தண்டனை விபரம் பின்னர்!
  • மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திலகசிரி பெரேரா கைது!
  • சாமர சம்பத்தின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.