டொலர் மூலமான பாரிய நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்கிறது. 2014இல் 135 ரூபாவுக்கு இருந்த டொலர் பெறுமதி தற்போது 200 ரூபாவை மீறுமளவிற்கு மோசமடைந்துள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“டொலர் இருப்புகளை அதிகரிப்பதால்தான் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த முடியும். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த உண்மையை அரசாங்கம் மக்களிடம் சொல்லவேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3










