கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் திகதி முதல் ஒகஸ்ட் 8ம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் இன்று தொடங்குகிறது. 2011-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடிய போது, அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவிருந்த 05 இலட்சம் அளவிலான தடுப்பூசிகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது…
இந்தியா Oxford-AstraZeneca தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியதனால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த 05 இலட்சம் அளவிலான தடுப்பூசிகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக இலங்கை அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் கே.எம்.டி.ஆர்.தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு தடுப்பூசிகள் ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங் கங்கையை மறித்து நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டம்… யுனெஸ்கோ பாதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
கிங் கங்கையை மறித்து நீர்த்தேக்கத்தை அமைக்கவிருக்கும் திட்டத்தினால், உலக மரபுரிமை வனாந்தரமான சிங்கராஜாவின் ஏறக்குறைய 04 ஏக்கர் பரப்பளவும் பாதிப்பு ஏற்படுமென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.
லங்காகம மாது கெட்டே பிரதேசப் பகுதியில், கிங் கங்கையை மறித்து இந்த நீர்த்தேக்கம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதனால் ஏற்படப்போகும் பாதிப்பு பற்றியும் யுனெஸ்கோ நிறுவனத்தினால் அமைச்சர் சமல் ராஜபக்ஸவிற்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான காடழிப்புத் திட்டங்களுக்கு எதிராக நாட்டில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதுடன், தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இன்று தேசிய துக்க தினம்… கொழும்பில் இறைச்சி மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டன…
இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு,இன்றைய (25) தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சி வெட்டும் இடங்கள் அத்துடன் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறி செயற்படுபவர்களின் மதுபான விற்பனை அனுமதிபத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயால் புற்றுநோய் ஏற்படும்…பெருந்தொகையான தேங்காய் எண்ணெய் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டன…
இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது சுத்திகரிக்கப்படாத 8 ஆயிரத்து 300 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முதல் முறையாக இந்த தகவலை வெளியிட்டது.
இன்று இதுவரையில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் இன்று இதுவரையில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜெர்மனி : ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சல் மெர்சல் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 28 வரை ஜெர்மனியில் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், பிறகு தளர்வுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
அதிபர் ஏஞ்சல் மெர்சல் அறிவிப்பில் கூறியதாவது :
ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது
இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை – தேசிய தேர்தல் ஆணைக்குழு
எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஆணைக்குழு, தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில், அரசியல் குழுக்கள் தேசியக் கட்சிகளாகப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் கூட்டத்தின் போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போதுள்ள பெயர்களைத் திருத்துவதற்கு இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு நியாயமான நேரத்தை வழங்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மாற்றுவதற்கும், 18 வயதை எட்டியவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிசெய்வதற்கும் வர்த்தமானி செய்யப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, 1985ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் மோதல் காரணமாக உயிரிழந்தவர்களை உறுதிப்படுத்துவது தேர்தல் ஆணையகத்தின் மற்றொரு தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறந்தவரின் விபரங்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஏப்ரல் 23ஆம் திகதி வரை மாவட்ட செயலக அலுவலகங்களிலும் தேர்தல் ஆணையகத்தின் வலைத்தளத்திலும் காண்பிக்கப்படும்.
இதன்படி, பட்டியலில் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆணையகத்தில் பதிவுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மேலும் பெயர்கள் 2020 தேர்தல் பதிவேட்டில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
புகைபிடிப்பதை ஊக்குவித்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், வீரவன்சவால் ஊக்குவிக்கப்பட்ட இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட் வகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகம் (National Authority on Tobacco and Alcohol) எச்சரித்திருந்தது.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாமல், சிகரெட்டைச் சந்தைக்குக் கொண்டுவருவது சட்டத்தை மீறும் செயலென குறித்த ஆணையகத்தின் சட்டத் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என ஆயுர்வேத திணைக்களமும் சுகாதார அமைச்சும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகத்துக்கு அறிவித்துள்ளன.
இந்நிலையில், புகைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : உதயன் செய்திகள்
இந்த அரசாங்கத்திலும் மோசடியை மூடி மறைப்பதற்கு ‘புட்நோட்’ கும்பல் செயலாற்றுகிறது – விஜித ஹேரத்
கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மத்தியவங்கி பினைமுறி மோசடியை மூடிமறைக்க ‘புட்நோட்’ கும்பல் செயற்பட்டதுபோல, இந்த ஆச்சியின் சீனி கொள்ளையை மூடிமறைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சி செய்யவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சிரச நிறுவனத்தின் ‘ச(ட்)டன’ நிகழ்ச்சியில், 15.9 பில்லியனுக்கும் அதிகமான பணம் நாட்டிற்கு இல்லாமல் செய்யப்பட்ட சீனி மோசடி குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்ச்சியில் அரசாங்கத் தரப்பில் கலந்துக்கொண்டிருந்த திஸ்ஸ குட்டிஆராச்சி மற்றும் ஜகத் குமார ஆகியோர் “சீனி வரி குறைப்பால் மோசடி இடம்பெறவில்லை.” என மீண்டும் மீண்டும் கூறினர்.
அதேவேளை, சீனி வரியைக் குறைத்தத்தான் பின்னர் 85 ரூபாவிற்கு மக்களால் சீனியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை ஏற்றுக்கொண்ட திஸ்ஸ குட்டிஆராச்சி, “சீனியைக் குறைந்த விலைக்கு வியாபாரிகளே விற்கவில்லை.” என குறிப்பிட்டார்.
- « Previous Page
- 1
- …
- 578
- 579
- 580
- 581
- 582
- …
- 605
- Next Page »