இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவிருந்த 05 இலட்சம் அளவிலான தடுப்பூசிகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது…

vaccine 25.03.2021

இந்தியா  Oxford-AstraZeneca   தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியதனால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த 05 இலட்சம் அளவிலான தடுப்பூசிகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக இலங்கை அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் கே.எம்.டி.ஆர்.தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு  தடுப்பூசிகள் ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்