Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது – அநுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

23/02/2021 Leave a Comment

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என மக்கள் விடுதலை முன்னையின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமனற்ற உறுப்பினருமான அநுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இரு விடயங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர் என தெரிவித்த அவர்,

எச்சரிக்கை கிடைத்த நிலையிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியது யார் என்பதை முதலாவதாக மக்கள் அறிய விரும்புகின்றனர். இரண்டாவதாக, தற்கொலை குண்டுதாரிகளின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டதுடன், இந்த கேள்விக்கு அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் மறைக்கமுயல்வதாக தெரிவித்துள்ள அநுரகுமார திசநாயக்க கிராமத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தும் முறை குறித்தும் குறிப்பிட்டார்.

காட்டில் பொறிவைத்து விலங்குகளை வேட்டையாடியவர்களைப் பிடிக்க, கொல்லப்பட்ட விலங்கினை தனது தோளில் சுமந்து சென்ற நபரை பொலிஸார் தேடுவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு வேட்டை என கருதினால் தாக்குதல் இடம்பெற்று ஒன்றரை வருடங்களின் பின்னரும் வேட்டையாடப்பட்ட விலங்கை தூக்கி சுமப்பவர்கள் யார் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தினார்கள். நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு யார் பயன்படுத்தினார்கள் எனவும் நாங்கள் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்பது குறித்து அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்குள்ளது அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள் காணாமல்போகச் செய்வதில் வல்லவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவு

23/02/2021 Leave a Comment

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி பனிப்பாறை பெயர்ந்ததால் எதிர்பாராத விதமாக பெரும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தபோவன் பகுதி தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டனர்.  தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 206 பேரில் 70  பேரின்  உடல்கள் மீட்கப்பட்டது. 29 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. எஞ்சிய 136 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. 

நன்றி : தீக்கதிர் 

Filed Under: உலகம்

நாடு பொருளாதார நெருக்கடியில் – தயாசிறி ஜயசேகர

23/02/2021 Leave a Comment

டொலர் மூலமான பாரிய நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்கிறது. 2014இல் 135 ரூபாவுக்கு இருந்த டொலர் பெறுமதி தற்போது 200  ரூபாவை மீறுமளவிற்கு மோசமடைந்துள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“டொலர் இருப்புகளை அதிகரிப்பதால்தான் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த முடியும். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த உண்மையை அரசாங்கம் மக்களிடம் சொல்லவேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

தடுப்பூசி வழங்கள் வேலைத்திட்டம் ஒழுங்கற்றுப் போயுள்ளது – GMOA

23/02/2021 Leave a Comment

மரணம் மற்றும் சிக்கல்க்லைத் தவிர்க்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி வழங்கள் வேலைத்திட்டம் இதுவரையில் அமைப்பு ரீதியாக இயங்காது ஒழுங்கற்றுப் போயுள்ளதாக அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Filed Under: செய்திகள்

எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிவரை பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

23/02/2021 Leave a Comment

இன்று நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பரீட்சை தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பரீட்சை வினாக்கள் தொடர்பான அல்லது அது சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 1911 என்ற துரித எண்ணுக்கோ அறிவிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Filed Under: செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – வேலு குமார்

23/02/2021 Leave a Comment

“பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது சேவைகளில் உள்ள சிற்றூழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

அவர் மேலும்,

“பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களும் லயன் அறைகளில் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான சுகாதார வசதிகளும் மிக கீழ் மட்டத்திலேயே உள்ளது. அத்தொடு அவர்கள் தொடர்ச்சியாக தொழிலிலே ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். இக்காரணிகளை கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.   

தற்போது கோவிட் தடுப்பூசி வழங்களில் சிக்கலான நிலைமை தோன்றி இருக்கின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலும் முன்மொழியப்பட்ட தடுப்பூசி வழங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் கைவிடப்பட்டு இருக்கின்றது. எவ்வித திட்டமிடலும் இன்றி ஒழுங்கற்ற வகையிலே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருவர் தடுப்பூசியை பெறுவதற்கான அடிப்படை என்ன?, அதனை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை என்ன?, அதுதெடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக எவ்வித முறையான தெளிவுபடுத்தலும் இல்லாதிருக்கின்றது. தற்போது தடுப்பூசி வழங்கல் எவ்வாறான அடிப்படையில் இடம்பெறுகின்றதென்பது குழப்பமான ஒன்றாக உள்ளது.

மக்களுக்கான பொது பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதே போல அப்பொதுப்பணிகளில் உள்ள உயர் மட்டத்தவர் மட்டுமன்றி சிற்றூழியர்கள் வரை அவ்வசதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சிற்றூழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் சன நெருக்கடி மிக்க இடங்களிலேயே குடியிருக்கிறார்கள். கோவிட் தாக்கமும் அங்கே பாரிய அளவில் உள்ளது. விசேடமாக கண்டி மாநகர எல்லையில் உள்ள மஹியாவை, நித்தவளை கிராமங்கள், அதே போன்று கம்பளை மற்றும் நாவலபிட்டிய நகர எல்லையில் உள்ள குடமாக்க மற்றும் சோய்ச்சியாகல போன்ற பிரதேசங்களை குறிப்பிடலாம்.” என்று கருத்து தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை! – வாசுதேவ நாணயக்கார

23/02/2021 Leave a Comment

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு அறிவு இருந்தால் போதும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதி நியமித்துள்ள குழுவில் இருக்கும் சிலர் சாதாரண தரப் பரீட்சையில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

மாத்தறை சிறையில் 30 பேருக்கு கொரோனா

23/02/2021 Leave a Comment

மாத்தறை சிறைச்சாலையில் 30 பேருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி இவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 53 பேரினது PCR அறிக்கை நேற்று (22) கிடைக்கப்பெற்றது. இதன்படி, 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

22/02/2021 Leave a Comment

மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் : அரசாங்க தகவல் திணைக்களம் 

Filed Under: செய்திகள்

திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்! – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள்

22/02/2021 Leave a Comment

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தொகுதியை நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஊடாக திருகோணமலை துறைமுகமும் இலங்கைக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜேசிங்க கூறுவது என்ன?. திருகோணமைலை துறைமுகத்திற்கு சொந்தமான 500 ஏக்கர் காணியில் முதல் கட்டமாக 100 ஏக்கர் காணியை மூன்று கட்டங்களாக 10.2 பில்லியன் ரூபாயை செலவிட்டு 24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிக்க உள்ளதாக கூறுகிறார்.

மூலோபாய திட்டமிடல் மற்றும் செயற்திறன் முகாமைத்துவத்தை ஏற்படுத்த உள்ளனராம். இதனை செய்ய 10 மில்லியன் டொலர்களாவது செலவாகும்.

24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்து, கட்டிடத்தை நிர்மாணித்து 10 பில்லியன் ரூபாய் செலவில் கடலுக்குள் குழாய் பதிக்க உள்ளனராம்.

இதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தை நாம் இழப்பது மாத்திரமல்ல அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்.

இந்த நிறுவனத்தை இலங்கை அரசே ஏற்படுத்தவுள்ளதாக விஜேசிங்க கூறுகிறார். துறைமுக அதிகார சபையும் இந்திய எண்ணெய் நிறுவனமும் இணைந்து இந்த நிறுவனத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படியான அதிகாரத்தை யார் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. அமைச்சரவையில் இது பற்றி கலந்துரையாடப்பட்டதா? எனவும் ஆனந்த பாலித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தமிழ்வின் செய்திகள் 

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 594
  • 595
  • 596
  • 597
  • 598
  • …
  • 606
  • Next Page »

Recent Posts

  • “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்வாழ்வு” நிகவெட்டிய பேரணியிலும் திரண்டது மக்கள் பெருங்கடல்!
  • சபாநாயகர் பதவியின் சலுகை நிர்வாகத்தில் மாற்றம்… ஒதுக்கீட்டிலும் பாரிய குறைவு!
  • மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுங்கள் – 325 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு!
  • நாமல் ராஜபக்ச அந்த விளையாட்டை சூப்பராக விளையாடினார்!
  • தேசிய நாமல் உய்னவின் 36வது ஆண்டு விழா; பெருந்திரளான மக்களுடன் முழங்குகிறது வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் முன்னணி!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.