மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை டீசைட் தோட்டத்தை சேர்ந்த 3 பிரிவுகளில் பணிபுரியும் 300 தொழிலாளர்கள் இன்று (16) பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டு உள்ளனர்.
தோட்ட நிர்வாக கெடுபிடி காரணமாகவே இந்த பணி பகிஸ்கரிப்பு இடம்பெறுகின்றது.
தொழிலாளர்களிடம் 18 கிலோ பச்சை கொழுந்தை பறித்தாலும் முழுமையான வேதனம் வழங்கப்படுவதில்லை எனவும் கடந்த 11 ஆம் திகதி முதல் இவ்வாறு கொழுந்து பறித்தவர்களுக்கு பாதி வேதனம் மட்டுமே தோட்ட நிர்வாகம் வழங்கும் என கூறியதை தொடர்ந்தே இந்த பகிஸ்கரிப்பை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் கோரிக்கையானது தங்கள் பணிபுரியும் தினத்தில் தாங்கள் பறிக்கும் 16 கிலோவிற்கு நாளாந்த வேதனத்தையும் அதற்கு மேல் பறிக்கும் பச்சை கொழுந்திற்கு 40 ரூபா வீதம் வழங்க வேண்டும் எனவும் கொழுந்துகள் 3 தரம் நிருவையின் போது தட்டுக்காக வெட்டப்படும் 4 கிலோ வீதம் 12 கிலோ வெட்டுவதை தவிர்த்து 6 கிலோ மட்டும் வெட்ட வேண்டும் எனவும் தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளை பாதுகாக்க உரம் இடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்து 300 தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு உள்ளனர்.
