இன்றுதான் அந்த நாள்

President Anura Kumara Dissanayake 2024.11.18 (1)

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்காக நாட்டின் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து 13 இலட்சத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளை வழங்கிய ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது.

அதன்பின்னர் கடந்துசென்ற இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு எதிராக சில போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும், பொதுமக்கள் மீது ஒரு கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரைப் பிரயோகம்கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், பேச்சுவார்த்தைகள் மூலமே அனைத்துப் பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் மேலும் நிலைகுலைந்துபோய், சர்வாதிகார ஆட்சி பற்றிய பிரசாரங்களை மேற்கொண்டுவருவது இந்த பின்னணியிலேயேயாகும்.

வாங்குரோத்தடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக வழமைக்குக் கொண்டுவந்து, வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைக் குறைந்த மட்டத்தில் பேணி, உள்நாட்டு நிதி முதலீட்டில் பாரிய அளவிலான திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களைக் கொண்ட காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்