இன்றைய தினத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் இந்நிலைமை காணப்படலாம் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் திறந்தவெளிப் பணிகளில் ஈடுபடுபவர்கள் போதுமான அளவு நீரைக் அருந்துமாறும், தேவையான ஓய்வை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், வெயிலில் வெளியே செல்லும்போது வெள்ளை அல்லது இளம் நிறத்திலான இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
5










