இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் யுடியூப் அலைவரிசையுடன் நடைபெற்ற உரையாடலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முற்போக்கான அணியொன்று இருப்பதாக கூறியதோடு அதனைக் கேள்விக்குட்படுத்தி கலாநிதி வரா தியாகராஜா தனது முகநூலில் கடிதமொன்றை பிரசுரித்துள்ளார்.
அந்த கடிதம் முழுமையாக கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் 13/9 திகதி SLVLOG YouTube நேர்காணலில் (https://www.youtube.com/watch?v=2vlUzVF9FWY) இவ்வாறு கூறியிருந்தார்.
“සමගි ජන බලවේගය ගත්තහම හැබැයි ඒකේ ඉන්න දෙවැනි පෙලේ හරි තුන්වෙනි පෙළේ හරි නායකයෝ හරිම ප්රගතිශීලීයි”.
“ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரை அதன் இரண்டாவது மற்றும் மூன்றாம் தர தலைமைத்துவம் மிகவும் முற்போக்கானது”.
கூட்டமைப்பு ஏன் சஜித் பிரேமதாசவின் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தது என்பது தொடர்பான விளக்கங்களை தெரிவிக்கும் போதே அவர் இந்த காரணத்தையும் முக்கியமாக குறிப்பிட்டார்.
இதில் ஏனைய கட்சிகளை பார்க்கிலும் சஜித் பிரேமதாஸாவின் கட்சியில் முற்போக்கான தலைமைத்துவம் இருப்பது தங்களது ஆதரவை கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்ததாகவே விளங்கிக்கொள்ள முடியும்.
மற்றக் கட்சிகளை விடுவோம். சஜித்தை சுற்றி உள்ள நபர்கள் யார் என்று ஒரு கணம் பார்த்தால் இராசமணிக்கத்தின் முற்போக்குக் கருத்துத் தொடர்பாக எந்தவொரு அரசியல் அறிவும் இல்லாத நபருக்கு கூட சந்தேகம் தான் வரும்.
சரி இப்போது சஜித்தை சுற்றியுள்ள சில முக்கிய அரசியல் புள்ளிகளைப் பார்ப்போம்.
1. சம்பிக்க ரணவக்க
2. மனோ கணேசன்
3. பழனி திகாம்பரம்
4. நாலக்க கொட்டேகொட
5. கீதா குமாரசிங்க
6. டல்லஸ் அலகப்பெரும
7. ரவூப் ஹக்கீம்
8. ஹர்ஷா டி சில்வா
9. எரான் விக்ரமரட்ன
10. தயாசிறி ஜயசேகர
இவர்களின் அண்மைக்கால அரசியல் வரலாற்றை பார்த்தால் இவர்களுக்கு மத்திய வங்கியை கொள்ளை அடித்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஊழல் மற்றும் சிங்கள பேரினவாதத்தின் பரம்பலும் தமிழ் பேசும் மக்கள் மீதெடுத்து வீசப்பட்ட அரசியல் வன்முறையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று இராசமாணிக்கம் சாணக்கியன் சிந்திக்கின்றார் போலிருக்கிறது.
கூட்டணியில் இருக்கும் பழைய,
மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஆட்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இராசமாணிக்கம் சாணக்கியன் ஒரு கணம் யோசிக்கிறார் போலிருக்கிறது.
இது இப்படி இருக்க, நேற்று பேராசிரியர் காமினி கீரவல்ல தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் ஆங்கிலத்தில்…
“7) The Jathika Jana Balawegaya (NPP/Malimawa) and the Samagi Jana Balavegaya (SJB/Telephone) were seen as potential forces for change. However, the SJB’s absorption of a significant number of corrupt political leaders from the disintegrating Pohottuwa has severely undermined its credibility. As a result, it is no longer viewed as a force capable of bringing about the decisive changes needed to dismantle the political class that has dominated since the 1970s, particularly after 1977, regardless of which party was in power.” – Prof Gamini Keerawella.
(https://www.facebook.com/share/p/Y9hYaCvfnJbHURqU/?mibextid=WC7FNe)
பேராசிரியர் கீரவெல்ல தனது குறிப்பில், தெற்கில் நடந்த 2022 அரகலய போராட்டத்திற்கு பிறகு நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரக் கூடிய பாரிய அரசியல் சக்திகளாக தேசிய மக்கள் சத்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கருதப்பட்டது. ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது ஊழல் மிகுந்த அரசியல் தலைவர்களை முக்கியமாக மொட்டுக் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் அரசியல் தலைவர்களை தங்களோடு இணைத்துக் கொண்டுள்ளதால் சஜித் தலைமைத்துவத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 1970-77 களிலிருந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் ஊழல் மிகுந்த அரசியல் வர்க்கத்தை ஒழிப்பதற்கு தேவையான அரசியல் பலமும் தேவையும் இருக்கு எனக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஊழல் என்பது நாட்டின் எல்லா பகுதிகளிலும் பரவி இருப்பதும் நாட்டின் அண்மைக்கால அழிவிற்கு மிக முக்கிய பங்காக ஊழல் அமைந்திருப்பதை பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அப்படி இருக்கும் போது ஊழல் மிகுந்த அரசியலை ஒழித்து நல்லாட்சி ஒன்றை கொண்டு வந்து இலங்கையை அழிவிற்கெடுத்துச் சென்ற அரசியல் வர்க்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தேவை இருக்கின்றது.
மேலும் இத்தேவையை பூர்த்தி செய்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு எந்த ஒரு அரசியல் பலமும் அல்லது தேவையும் இல்லாதது தெளிவாக தெரியும்போது இராசமாணிக்கம் ஏன் அதனை ஒரு முற்போக்கான சக்தி என்று சொல்கிறார்? இதற்கு காரணம் என்ன?
அண்மையில் வடக்கில் காணப்பட்ட ஊழலுக்கு எதிரான குரல்கள் போன்ற விடயங்களை கவனித்துப் பார்க்கும் போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு புதிய மாற்றம் ஒன்றுக்கான ஏக்கம் இருந்து கொண்டேதான் வருகிறது என்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்த மாற்றத்தினுள் அவர்களது போர்க்கால அனுபவங்களும் அதற்கு ஏதுவான நீதி கோரல்ளும் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க இயலாமையும் சேர்ந்திருப்பதும் கவனித்திற்குரியவை. இவை எல்லாவற்றையும் ஆதரிக்க கூடிய அரசியல் தலைமைத்துவம் இன்னும் தெற்கில் உருவாகவில்லை என்பது ஏற்று கொள்ளக் கூடிய உண்மைதான். அப்படி இருக்க குறைந்த பட்ச மாற்றங்களான இனவாத அரசியலை தோற்கடித்த ஊழலை ஒழிக்கக் கூடிய பாதையை விட்டுவிட்டு தெற்கில் பிற்போக்கு என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சக்தியை முற்போக்கு என்று வெள்ளைச் சுண்ணாம்பு பூசுவதன் தேவை என்னவென்று இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் பேசும் மக்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார் என்பது நியாயமான எதிர்பார்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதியாக Tamil-speaking people deserve better என்றுதான் சொல்ல முடியும்.
வரா தியாகராஜா
15.09.2024










