Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இழுத்தடிக்கிறது அரசாங்கம் – சர்வதேச நீதிமன்றம் செல்ல பேராயர் தீர்மானம்…

12/03/2021 Leave a Comment

“குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டு அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்குமானால் நாம் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும்.” என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

“ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டும், அதனை ஆராய இன்னொரு ஆணைக்குழுவை நியமித்துக்கொண்டும் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனவே குற்றவாளிகளை பாதுகாக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்படக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு நிதியுதவி வழங்கியவர்கள், மறைமுக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் போன்றோர் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

சொந்த கிராமத்திற்குச் சென்ற மக்களை தடுத்தனர் இராணுவத்தினர்… உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும் கிராம மக்களுக்கு அனுமதி இல்லை…

12/03/2021 Leave a Comment

வவுனியா, வடக்கு நெடுங்கேணி  வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளதாகவும், தம்மிடம் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரம் காணப்படுகின்றபோதிலும் அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்புரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள். 

வெடிவைத்தகல் கிராமத்தில்  இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள்  உட்சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர். 

இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது  15 குடும்பத்தினர் இக்கிராமத்தில் உள்ள தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு  கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவளதிணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில்  உள் நுழைவதற்கான அனுமதி பத்திரத்துடன்  குறித்த பகுதியில் உள்ள தம் சொந்த காணிகளினை துப்பரவு செய்ய  சென்ற போது இராணுவத்தினர்  குறித்த கிராமத்திற்குள் உட்செல்ல தடைவிதித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள்  உட்செல்ல இராணுவத்தினர்  தடை விதித்த நிலையில் இது தொடர்பாக வவுனியா  மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம்  இது தொடர்பாக  முறையீடு செய்த போது  இவ்விடயம்  தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக எமக்கு  கூறியிருந்தும்  இதுவரை  எமக்கான நீதி  கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Filed Under: செய்திகள்

சீனி வரி மோசடி… 15.9 பில்லியன் ரூபாய் வருமான இழப்பு… சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதி மன்றில் மனு

12/03/2021 Leave a Comment

சீனி வரி மோசடி குறித்து சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதி மன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சீனி இறக்குமதியின் போது 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற் படுத்தப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய் துள்ளார்.

சீனி இறக்குமதிக்கான வரி 50 ரூபாயாக இருந்ததுடன் அந்த வரி 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலத்தில் 25 சதமாக குறைக்கப்பட்டால், ஆயிரத்து 590 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வரி மோசடி எனவும் சுனில் ஹந்துன்னெத்தி முன்னர் குற்றம்சாட்டியிருந்தார்

Filed Under: செய்திகள்

மார்ச் 26-ம் திகதி ‘பாரத் பந்த்’: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

11/03/2021 Leave a Comment

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் திகதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.


இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி 26-ம் திகதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ம் திகதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்தன. அத்துடன், வரும் 15 ஆம் திகதியன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கங்களும் டெல்லியில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

Filed Under: உலகம்

மியான்மார் இராணுவத் தலைவரின் மகன், மகள் மீது பொருளாதார தடை – அமெரிக்கா

11/03/2021 Leave a Comment

மியான்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் மகன், மகள் மீதும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கும் எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் மியான்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியீட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மியான்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் ஆங் பே சோன் (Aung Pyae Sone), கின் திரி தெட் மொன் (Khin Thiri Thet Mon) மகன், மகள் இருவர் மீதும், அவர்கள் கட்டுபாட்டி உள்ள 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில்க் கூறியதாவது,

அமைதியாக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது இராணுவம் கடுமையாக தாக்கியது ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று, சுமார் 200 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைத் தொடர்ந்து கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) எச்சரித்துள்ளார்.
 

Filed Under: உலகம்

ஏ9 வீதி மறிக்கப்பட்டது… யாழில் தீவிரமடைந்தது சுகாதார தொண்டர்கள் போராட்டம்…

11/03/2021 Leave a Comment

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியாலும் கச்சேரி – நல்லூர் வீதியாலும் பொலிஸார் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களது போராட்டம் உணவுதவிர்ப்பு போராட்டமாக விரிவாக்கமடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர்கள் இன்று முற்பகல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது .

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IBC செய்திகளில் தகவல் பெறப்பட்டது 

Filed Under: செய்திகள்

அசோக் அபேசிங்க CID இல் ஆஜர்… வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது…

11/03/2021 Leave a Comment

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று (11) காலை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே சி.ஐ.டி.யினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

Filed Under: செய்திகள்

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரவேண்டும்… அதுவும் புத்தாண்டுக்கு முன்பு…

11/03/2021 Leave a Comment

இலங்கைக்கு அந்நிய செலவாணிய  ஈட்டித்தந்து பொருளாதாரத்திற்கு தூணாக இருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்பதாக இலங்கைக்கு அழைத்துவருமாறு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் மகிந்த சமரசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தேசிய விமான சேவையை பயன்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வெளிநாட்டு தூதுவர் காரியாலயங்களில் சேவையாற்றிய தேசிய நலன்புரி அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்ததன் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனுமதிபத்திரம் உடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைக்கும் செயற்பாட்டிற்கு தொழில் அமைச்சர் இடையூறு ஏற்படுத்தி வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எம் ஹர்சாட் தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

மஹா சிவராத்திரி வழிபாடுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி…

11/03/2021 Leave a Comment

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருடாந்த சிவராத்திரி வழிபாடுகள் இன்று (11) நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடாத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவராத்திரி வழிபாடுகளில் கொரோனா தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவற்றைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபையினர், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

குறிவைக்கப்பட்டன சிறுபான்மையினர் வாக்குகள் – 2025 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக்கட்சியில் களமிறங்கப்போவது யார் ? – அநுர குமார திஸாநாயக்க அம்பலப்படுத்துகிறார்.

11/03/2021 Leave a Comment

எதிர்வரும் 2025 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக்கட்சித் தரப்பில் இருந்து சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் குறிவைத்து களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அம்பலப்படுத்தியுள்ளார். 

நேற்று (10) கொழும்பு நகர மண்டபத்தில் “சிஸ்டம் பெயில்” என்ற பகிரங்க கருத்தரங்கு நிகழ்வின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிங்கள பௌத்த வாக்குகளின் மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்ற காரணத்தினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆளும் கட்சியில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றது.

ஆளும் கட்சியில் பசில் ராஜபக்ச மற்றும் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விரட்ட வேண்டுமென ஒரு தரப்பு கூறி வருகின்றது.

தாம் தோல்வியடையவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார். அண்மையில் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கச் சென்றுள்ளனர்.

மஹிந்தவை மொட்டு கட்சியின் தலைவராக்கி, மொட்டு கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டுமென விமல் தரப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

எனக்கு அரசியல் செய்ய முடியாது நீங்கள் அரசியல் செய்து கொள்ளுங்கள், நான் அடுத்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கோட்டாபய கூறியுள்ளார்.

அப்பேது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை இப்போது சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் எங்களால் அரசியல் நடாத்த முடியாது என கூறியுள்ளார்.

சிங்கள பௌத்த வாக்குளினால் நாம் வெற்றியீட்டினோம், எனினும் அடுத்த தடவை தமிழ், முஸ்லிம் சிறுபான்மை வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் ஒருவரே வெற்றியீட்டுவார் என கோட்டபாய கருதுகின்றார்,

அவ்வாறான வேட்பாளர் வேறு யாருமல்ல அது பசில் ராஜபக்சவே” என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 582
  • 583
  • 584
  • 585
  • 586
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.