ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது, பாரிய குற்றங்களுக்கு எதிராகத் திறம்படச் செயற்படுவது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட விதிகளை வழங்குவதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாகப் பாரிய குற்றங்களைத் தடுப்பது மற்றும் அவற்றுக்கெதிராகச் செயற்படுவதுடன், எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட அடித்தளத்தை அமைப்பதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


