Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

காணாமல்போன மகனை கண்டுபிடித்து தருமாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தந்தை மாரடைப்பால் மரணம்.

26/03/2021 Leave a Comment

2007 ஆம் ஆண்டில்  காணாமல்போன தனது மகனை  கண்டுபிடித்து தருமாறு பொறுப்புவாய்ந்தவர்களிடம் கோரி   வவுனியா நகரத்தில் 1496 நாட்களாக தொடர்ச்சியான உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட  தந்தையொருவர் மாரடைப்பினால் இறந்துள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பிரதேசத்தில்  வசித்த கனகையா ரங்கமூர்த்தி எனும் 63 வயதுடைய ஒருவரே இவ்விதமாக இறந்துள்ளார். 

 அவரது புதல்வனான ஆர். செல்வநாதன் என்பவர்  2007 ஆம் ஆண்டில் வவுனியா நகரத்தில் தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த தனக்கு பகலுணவு எடுத்து வந்துகொண்டிருந்த வேளையில்  ஏதோ ஒரு கும்பலால் கடத்திச்செல்லப்பட்டதால் காணாமல் போயிருந்தார்.

தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு  கோரி மேலும் சிலருடன் வவுனியா நகரத்திற்கு அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த இவர் திடீரென சுகவீனமுற்றதோடு  வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்ட பின்னர் இறந்துள்ளார். 

Filed Under: Uncategorized

நேற்று மாத்திரம் யாழில் 79 பேருக்கு கொரோனா

26/03/2021 Leave a Comment

யாழ்ப்பாணத்தில் நேற்று (25) மாத்திரம் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட 79 பேரை தவிர்த்து, மேலும் 80 பேர் வட மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

ஆலை உரிமையாளர்கள் பகா கொடுத்துள்ளார்கள் – அமைச்சர் மகிந்தானந்த

26/03/2021 Leave a Comment

ஒருசில அரிசியாலை உரிமையாளர்கள் சமூக ஊடகங்களுக்குப் பணம்கொடுத்து நாட்டில் அரசித் தட்டுப்பாடு நிலவுவதாக   போலியான செய்திகளை வெளியிடுவதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே  குற்றஞ் சுமத்தியுள்ளார்.

கடந்த 23 ஆந் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் நாட்டில் எந்தவிதமான அரிசித் தட்டுப்பாடும் நிலவுவதில்லை எனக்  குறிப்பிட்டுள்ளார். ” மக்களின் நுகர்வுக்காக மாதாந்தம்  ஒரு இலட்சத்து தொன்றூற்றி ஐயாயிரம் கிலோ (195. 000Kg) அரிசி  தேவைப்படுகின்றது. வருடமொன்றுக்கான நுகர்வுத் தேவை 24 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். இன்றளவில் 06 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் மிகைநிலை காணப்படுகின்றது.  நெல் தட்டுப்பாடு நிலவுவதாக  கூறுபவர்களுக்கு நான் சவால் விடுக்கத் தயார்.” எனக் கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

யாழ்.நகரின் மத்திய பகுதி 10 நாட்களுக்கு முடங்கும்… நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்…

26/03/2021 Leave a Comment

கோவிட் – 19 பெருந்தொற்று பரவல் காரணத்தினால் யாழ்ப்பாண மாநகரின் மத்திய பகுதியை  10 நாட்களுக்கு முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

அதன்படி, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் உடனே கோட்டை மற்றும் புதிய பஸ் நிலையப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

மின்சாரநிலைய வீதி முழுமையாகவும், கே.கே.எஸ். வீதி சாத்திரச்சந்தியில் இருந்து முட்டாஸ் கடை சந்தி ஊடாக பண்ணை வரையான பகுதிகளுடன் வைத்தியசாலை வீதியில் பூபாலசிங்கம் புத்தக கடையில் இருந்து சமிக்ஞை சந்தியை  தாண்டி சிவன்-பண்ணை வீதி வரையும் மூடப்படும். இதன்போது பழைய தபால் கந்தோர் வீதியும் மூடப்படும்.

Filed Under: செய்திகள்

26/03/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=840

Filed Under: Cartoons

முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்கு – இலங்கை புதுமுக வீரர் சதம்

25/03/2021 Leave a Comment

வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 271 ரன் எடுத்தது. 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 153 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

அந்த அணி 476 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை புதுமுக வீரர் பதும் நிசன்கா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் டெஸ்டிலேயே அவர் செஞ்சுரி அடித்து சாதித்தார். 6-வது வீரராக ஆடிய நிசன்கா 103 ரன்னும், டிக்வெலா 96 ரன்னும், பெர்னாண்டோ 91 ரன்னும், திரிமானே 76 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச், கார்ன்வால் தலா 3 விக்கெட்டும் , கெய்ல் மேயர்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

375 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து இருந்தது.
கேம்பெல் 11 ரன்னில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டம் இழந்தார். பிராத் வெயிட் 8 ரன்னும், போனெர் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Filed Under: செய்திகள்

“கெகில்லே ஆணைக்குழு” விசித்திரமான ஆணைக்குழு நீதித்துறை தத்துவத்தை முறைதகாதவகையில் பாவித்துள்ளது – மவிமு நீதிமன்றத்திடம்…

25/03/2021 Leave a Comment

அதிகாரத்திற்கு வந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியால் உடனடியாக அரசியல் பழிவாங்கல் பற்றி புலனாய்வு செய்வதற்காக  நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மோசடிப் பேர்வழிகளுக்கு, ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக தற்போது  தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற   79 வழக்குகளை  வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரை செய்தமை ஊடாக   மேற்படி ஆணைக்குழு  நீதிமன்றங்கள் கொண்டுள்ள  தத்துவங்களை முறைதகாதவகையில் பாவிப்பதற்கு எதிராகவும், அதைப்போலவே மோசடிப் பேர்வழிகளுக்கு ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக செயற்பட்ட  மவிமு தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகள் அனைத்தையும் இடைநிறுத்தவும்  அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து   விடுவிக்குமாறும் நேற்று  (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்    ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 இத்தருணத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திசாநாயக்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார ஆகியோர் பங்களிப்புச் செய்தனர்.

Filed Under: செய்திகள்

செய்த தவறுகளை அரசாங்கம் தேசியக் கொடியால் மூடிமறைக்கிறது- பிமல் ரத்நாயக்க

25/03/2021 Leave a Comment

தமது கொடிய நோக்கங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்த தவறுகளை அரசாங்கம் தேசியக் கொடியால் மூடிமறைக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

2021.03.24 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைதான் ஜெனீவாவில் தோல்விகண்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசிற்கு, இலங்கை மக்களுக்கு நேரடியான தாக்கத்தை எற்படுத்துகின்ற எந்தவொரு பிரேரணையும் அங்கீகரிக்கப்படவில்லை. அரசாங்கம் தனது மூர்க்கத்தனமான, சர்வாதிகார நோக்கங்களுக்காக வேலைசெய்து,  முழுநாட்டையும் உலகத்தவர் முன்னிலையில் அபகீர்த்திக்கு உள்ளாக்கி இருக்கின்றது.  நாட்டுக்கு எதிரான பயணத்தில் ஈடுபட்டிருப்பது  ராஜபக்ஷ எனப்படுகின்ற இந்த கும்பல் மாத்திரமே.” என்று அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

“தினேஷ் குணவர்தன கூறுகின்றவிதத்தில் 47  இல் 25 அரசாங்கத்தின் பக்கத்தில் இருக்கின்றனவாம்.   எதிராக 22 தான் இருக்கின்றனவாம்.  தினேஷ் குணவர்தன புதிய கணித எண்ணக்கருவொன்றை கண்டுபிடித்துவிட்டார். அவர் கூறுகின்ற விதத்தில் ஜெனீவாவில் அரசாங்கம் வென்றுவிட்டது. அதனால்தான் தமது தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வதில்லை என நான் கூறினேன். அரசாங்கத்தின் புத்தம்புதிய ஊடகக் கோட்பாடு எதிர்க்கட்சியினர் பொய்கூறுகிறார்கள் என்பதாகும். காடுகளை அழிக்கும்போது அதனை இல்லையென மறுக்கிறார்கள். ஆர்ஜென்ரீனாவில் பிரேசிலில்தான் காடுகளை அழித்துள்ளதாக கூறகிறார்கள். சீனி மோசடி பற்றி பேரும்போது அவ்வாறு இடம்பெறவில்லை எனக் கூறுகிறார்கள்.   மஹர சிறைச்சாலையில் படுகொலை இடம்பெறவில்லை எனக் கூறுகிறார்கள். இப்போது ஜெனீவா தோல்வியை இல்லையெனக் கூறுகிறார்கள். கித்துள் மரத்தில் எறியவனும் இதனைப் பார்க்கிலும்  தர்க்கரீதியான  ஒரு விடயத்தைக் கூறினான். குறைந்தபட்சம் கித்துள் மரத்தில் ஏறிய மனிதனைப்போலாவது தர்க்கரீதியான ஒன்றைக் கூறுமாறு இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு நாங்கள் கூறுகிறோம். வாக்களிப்பில் இருந்து  விலகிநின்ற அனைவருமே தமக்கு சார்பாக நடந்துகொண்டார்கள் என்றால் இலங்கையின் ஒவ்வொரு தேர்தல் பெறுபேறுகளையும் அவ்விதமாக உற்றுநோக்க வேண்டும்.   கடந்த சனாதிபதி தேர்தலில் 162 இலட்சம்பேர் பதியப்பட்ட வாக்காளர்களாக இருந்தார்கள்.  அதில் திருவாளர் கோட்டாபய ராஜபகஷவிற்கு  69 இலட்சம் வாக்குகளே கிடைத்தன. எனவே அவருக்கு வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தைவிட அதிகமானதாகும். திருவாளர் தினேஷ் குணவர்தனவின் புதிய கணிதக் கோட்பாட்டுக்கிணங்க எடுத்துக்கொண்டால் திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஏறக்குறைய 95 இலட்சம் வாக்குகளால் தோல்வி.  உலகத்தை எள்ளிநகையாட வைக்கின்ற  கதைகளைக் கூறவேண்டாமென நாங்கள் கூறுகிறோம். அரசாங்கம் தனது ஊடக படையணியை ஈடுபடுத்தி  எதிர்க்கட்சியினர் பொய்கூறுகிறார்கள் எனும் அப்பிராயத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றது.  

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஜெனீவா ஆணைக்குழுவின் வாக்கெடுப்பிற்கு பின்னர் பாலஸ்தீனம் பற்றிய  பிரேரணையே எடுத்துக்கொள்ளப்பட்டது.  பாலஸ்தீனத்தில் இஸ்ரவேல் புரிகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரேரரணைக்கு ஆதரவாக அதாவது பாலஸ்தீனத்திற்காக 32 வாக்குகள் கிடைக்கின்றன. பாலஸ்தீனத்திற்கு எதிராக 06 வாக்குகளே கிடைக்கின்றன. 08 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிநின்றன.  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் மத்தியில் எமக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இருக்கின்றன.  அதன் மூலமாக கூறப்படுவது தமது நாட்டுக்குள் நியாயத்திற்காக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயற்படுவார்களாயின் அத்தகைய நாடுகளால் உலகத்தை வெற்றிகொள்ள இயலுமென்பதாகும்.  இன்னமும் தன்னாதிக்கமுள்ள ஒரு நாடாக திட்டவட்டமாக நிறுவப்பட்டிராத   பாலஸ்தீனம் அதனை நிரூபித்துள்ளது. பிரித்தானியாவைத் தவிர்ந்த முழு ஐரோப்பியாவினதும் வாக்குகளைப்பெற பாலஸ்தீனத்திற்கு இயலுமானால்  ஏன் இலங்கைக்கு முடியாது?  இந்த இடத்தில் கேள்விக்குட்படுத்தப்படுவது இலங்கை அரசாங்கத்தின்  அரசியல் குற்றமே. மிகவும் கெட்ட இடத்தில்கூட நல்ல ஒன்றை வெற்றிபெறச் செய்விக்க இயலுமென்பதை பாலஸ்தீனம் நிரூபித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாத்து நீதிமன்ற முறைமையின் சுயாதீனப் பண்பினை பாதுகாக்குமாயின்  பெரும்பான்மை உலக நாடுகளின் ஆதரவுடன் ஜெனீவாவை வெற்றிகொள்ள இயலும். தமது, கொடிய சர்வாதிகார பலத்திற்காக  நாட்டைக் காட்டிக்கொடுத்து இருக்கிறார்கள். இலங்கை தோல்வியடைந்தமை, பெயருக்கு களங்கம் ஏற்பட்டமை சம்பந்தமாக இந்நாட்டு மக்களோ வேறு எவருமே பொறுப்புக்கூற வேண்டியதில்லை.  எமது நாட்டுக்காக ஏனைய நாடுகளின் வாக்குகளைப் பெற முடியாத மட்டத்திற்கு கொண்டுவந்த கோட்டாபய ஆட்சியே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போதாவது தலைவீக்கத்தை கைவிட்டு தவறினை ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்ததடவையில் வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமாயின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.”

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

“இலங்கையில் 1987 – 1990  காலப்பகுதிய்ல் பாரதூரமானவகையில் மனித உரிமைகளை மீறிய ஆளொருவரை நிரந்தர பிரதிநிதியாக்கியதும் டயஸ்போராக்கள் பதிதாக ஒன்றையும் கூறவேண்டியதில்லை. அதனால்தான் நாங்கள்  தீய உள்நாட்டுக் கொள்கையால் நாட்டை வெற்றிகொள்ளவும் முடியாது உலகத்தை வெற்றிகொள்ளவும் முடியாது எனக் கூறுகிறோம்.   

இலங்கைக்கு எதிராக குரல்கொடுக்கின்ற டயஸ்போரா சதாகாலமும் இருக்கும்.  ஆனால் எமது நாட்டு ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயம்தான் நாட்டின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பது.  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணையில்  இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள விடயங்களே இருக்கின்றது. அவை ஜெனீவாவில் கூறினாலும் கூறாவிட்டாலும் நாங்கள் செய்யவேண்டியவையே.  இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு இலங்கையில் மனித உரிமைகளை மீறுவதல்ல. இலங்கை வழமைபோல சனநாயக ஆட்சியை பேணிவருமாயின் ஏனைய நாடுகளை வென்றெடுக்க முடியும். அரசாங்கம் தனது அரசியல் பலத்திற்காக  நாட்டை தலைகுணியவைத்து வேறு அமைப்புக்களை ஏசுவதில் பயனில்லை. வடக்கின் குற்றச்செயல்கள் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இலங்கை இராணுவத்திற்கு  மாத்திரமன்றி எல்ரீரீஈ அமைப்பிற்கும் குற்றச்சாட்டு இருக்கின்றது.  எனவே அரசாங்கம் செய்ய வேண்டியது வடக்கில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் பற்றி இலங்கை மட்டத்தில் நியாயமான விசாரணையொன்றை மேற்கொண்டு அந்த மக்களுக்கு நியாயம் வழங்குவதாகும்.  ராஜபக்ஷ அரசாங்கம் செய்யவும் இல்லை.  மைத்திரிபால – ரனில் அரசாங்கமும் செய்யவில்லை. இந்த பிரச்சினையை இனவாத அடிப்படையில் பாவித்துக் கொள்வதையே ராஜபக்ஷமார்கள் எப்போதுமே செய்தார்கள்.  ரனில், மைத்திரி, சஜித் குழு  இந்த மக்களின் துன்பங்களை தேர்தலுக்காக பாவிக்கிறார்கள். ஆனால் நீதி வழங்கப்படவில்லை.” என்று தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை சுங்கத்திலிருந்து விடுவித்தவர் சீனி வரி மோசடியின் நுஷாட் பெரேரா

25/03/2021 Leave a Comment

புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிசெய்த இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேராவின் பணிப்புரையின் பேரிலேயே விடுவிக்கப்பட்டதாக இலங்கைச் சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தெரிவித்தார்.

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா சனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பதோடு, அவர் இந்நாட்டின் பிரபல்யமான சீனி வரி மோசடியினதும் பங்காளியாவார். சீனி வரி மோசடி நடைபெறுகையில் நுஷாட் பெரேரா சதொச தலைவராக பணியாற்றிதோடு, சீனி வரி மோசடியின் வியாபாரி சஜான் மவுசூனிடமிருந்து அதிக விலைக்கு சீனியைக் கொள்வனவுசெய்து சதொச நிறுவனத்திற்கும் நட்டமேற்படக்கூடியவகையில் பெறப்பட்ட விலையைப் பார்க்கிலும் குறைந்த விலையில் சீனியை விற்பனை செய்த மோசடிநிறைந்த கபடத்தனமான கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டவர்தான் நுஷாட் பெரேரா.
அதன் பின்னர் அவர் சதொசவில் இருந்து நீக்கப்பட்டு இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் தலைவராக சனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

அந்த நுஷாட் பெரேரா தற்போது சீனி வரி மோசடியைப் பார்க்கிலும் மோசமான குற்றத்தையே புரிந்துள்ளார்.
அப்லரொக்சின் எனும் புற்றுநோய் காரணி உயர்வான சதவீதத்தில் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புக் கூறு மூலமாக இனங்காணப்பட்டிருந்த, நான்கு கம்பெனிகளால் இந்நாட்டுக்கு கொண்டிவரப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் பற்றி இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில் அப்லரொக்சின் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்படவில்லை என நுஷாட் பெரேரா சான்றுரை வழங்கியுள்ளார்.

ஒரு இலட்சத்து எண்பத்தி மூவாயிரத்து ஐம்பத்தைந்து (183,055 Kg) கிலோகிராம் தேங்காய் எண்ணெய் இரண்டு கம்பெனிகளால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய குறிப்பிட்டார்.

Filed Under: செய்திகள்

2021 இல் இதுவரையில் 83 யானைகள் உயிரிழந்துள்ளன…

25/03/2021 Leave a Comment

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு மற்றும் இயற்கை காரணிகள் காரணமாகவே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 577
  • 578
  • 579
  • 580
  • 581
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.