மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்காகப் பொலிஸ் கடமைகளைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று அதிகாரிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பதவியுயர்வு வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் பதவியுயர்வுகளுக்காக சிரேஷ்டத்துவ வரிசையில் 146ஆவது இடத்தில் இருந்த வை. பி. கிரிஷாந்த, 326ஆவது இடத்தில் இருந்த எஸ். குணதிலக்க மற்றும் 401ஆவது இடத்தில் இருந்த பிரஷாந்த பெரேரா ஆகியோருக்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை தீர்மானம் மூலம் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.
இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 33 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விபரங்கள் அடங்கிய ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது: