“பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமடைகிறேன். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு அன்புக்குரியவர்கள் மற்றும் மக்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வழங்கியபோதிலும், அதனைத் தொடர்ந்து “அது பிரதமரின் தனிப்பட்டக் கருத்து” என்று உதய கம்மன்பில தெரிவிதிருந்தார்.


