Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

எமது அரசியல் குடியுரிமை என்ற கடதாசியில் தங்கியிருக்கவில்லை – அநுர குமார திஸாநாயக்க

19/02/2021 Leave a Comment

“எமது அரசியல் குடி உரிமை என்ற கடதாசியில் தங்கியிருக்கவில்லை. ஆனால் அநீதமாக, தான்தோன்றித்தனமாக, ஊழலான முறையில் குடியுரிமையை அழிக்க ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முயற்சியை நிச்சயமாக தோல்வியடையச் செய்வோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக நேற்று (2021.02.18) ஹைட்பார்க் மைதானத்தில் கூறினார்.

விசித்திரமான ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக “ஜனநாயத்துக்கான மக்கள் இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் சூழல் பாதிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஊழல்; மோசடி, தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் என ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷவின் பெரும் முயற்சி தன்னுடையதும் தனது நண்பர்களுடையதும் வழக்குகளை நீக்கிக்கொள்ளுவதாகும். அதற்காக ஓர் ஆணைக்குழுவை அமைத்தார்.
ஆணைக் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன. அவருடைய ஊழல்கள் தொடர்பாக புத்தகங்களில் பக்கம் பக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் நீதிமன்ற ஊழல் குற்றவாளி என அவற்றில் எழுதப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு செவிமடுக்காமல் தனது நண்பர்களுக்குத் தேவையான விதமாக வழக்கு(த் தீர்ப்புக்)களை எழுதியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக்கொண்ட குழுவொன்று இவர் ஊழல் செய்தவர் என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு கட்டாய விடுமுறையில் அனுப்பி ஓய்வுபெறச் செய்தது.
இந்த ஆணைக்குழுவின் இன்னுமொரு உறுப்பினர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பிரனாந்து. உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில அடிப்படை உரிமை மீறல் குற்றவாளியாக தீர்ப்பு செய்யப்பட்டு, அந்தக் குற்றத்துக்காக தனது சொந்த பணத்தில் ஓர் இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியேற்பட்டது.

இவ்வாறான ஊழல் பேர்வழிகளைக்கொண்ட ஆணைக்குழு ஒன்றுக்கு எங்களை விசாரிப்பதற்கு அல்ல; எங்களை அழைப்பதற்குக் கூட தார்மீக உரிமை கிடையாது” என்றும் அவர் மேலும் கூறினார்.


இப் பேரணியில் வலஸ்முல்லை நைகல விகாராதிபதி வகமுல்லே உதித தேரர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார, கலைஞர் ஜகத் மனுவர்ண, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சரோஜா சாவித்திரி போல்ராஜ், பேராசிரியர் விஜயகுமார், ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மஹிந்த ரத்நாயக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் அசோக பீரிஸ், மவிமு பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் உரையாற்றினார்கள்

Filed Under: செய்திகள்

எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க நாம் உடன்படவில்லை – இந்தியா கூறுகிறது.

19/02/2021 Leave a Comment

திருகோணமலை எண்ணெய் குதங்களை மறுபடி இலங்கைக்கு கைமாற்ற தாம் இணங்கவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா உடன்படுகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியதாக அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார். 

ஆனால், இந்திய அரசாங்கம் எண்ணெய் குதங்களைப் பற்றி தாம் மேலும் கலந்துரையாடுவதாகத்  தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் அதனை மீளப்பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 

“இந்திய அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கையிடம் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை.” என்று ‘இந்திய நியூஸ் ஏசியா’ இணையத்தளம் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தது. 

2003ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய IOC நிறுவனத்திற்குத் தாரைவார்த்தது. அன்றுமுதல் இன்றுவரை அது இந்திய அரசாங்கத்திடம் இருக்கிறது.

Filed Under: செய்திகள்

இந்தியாவின் தடுப்பூசிகளை திருப்பி அனுப்பும் தென்னாப்பிரிக்கா? குறைந்த தீர்வே தருவதால் எங்களுக்கு வேண்டாம்..!

19/02/2021 Leave a Comment

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா தனது நாட்டில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி சமீபகாலமாக பெருமைபேசி வந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தங்களுக்கு வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க நாடு திரும்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கடந்த வாரம்தான், இந்தியாவிலிருந்து சீரம் நிறுவனத்தின் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இந்த தடுப்பூசி பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதனை சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முன்பாக அவற்றை தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது, தங்கள் நாட்டில் பரவி வரும் மரபணு மாற்றம் அடைந்த புதியவகை கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்குவதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த தென்னாப்பிரிக்கா, இந்த தடுப்பூசிகளை நீங்களே திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியாவின் சீரம் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை சீரம் நிறுவனத்தின்  பூனாவல்லா மறுத்துள்ளார்.

Filed Under: உலகம், கொவிட்-19 செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை

19/02/2021 Leave a Comment

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர்கள்   பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை  அடிப்படையில் தடுப்பூசி  வழங்குவது அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது

19/02/2021 Leave a Comment

யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம் சென்னையில் நேற்று (18) இடம்பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கும், ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி 3.20 கோடி  ரூபாய்க்கும், தாவித் மலனை 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷிவம் துபேவை 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலம் எடுத்தது.

முதற்கட்ட இடைவேளைக்கு முன் கடைசி வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஏலம் விடப்பட்டார்.

இவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விருப்பம் காட்டின. இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியை தாண்டியது. 10 கோடி ரூபாயை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதின. கிங்ஸ் பஞ்சாப் விடாமல் 16 கோடி ரூபாய் வரை கேட்டது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

33 வயதான கிறிஸ் மோரிஸ் இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Filed Under: ஆடுகளம்

பிரதேச செயலகத்தில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்

19/02/2021 Leave a Comment

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாக பாடசாசை அதிபர்கள் பிரதேச செயலகத்திற்குச் சென்று மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக கேட்டுக்கொண்டார்.

சில மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய கடிதமும் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றுவதற்கு செல்லுபடியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

தடையை மீறி P2P பேரணியில் பங்குபற்றியவர்கள் மீது வழக்கு!

19/02/2021 Leave a Comment

“பேரணி நடத்த நீதிமன்றத் தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி வேறுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை இளைஞர் ஒருவர் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Filed Under: Uncategorized

தொற்று நோயியல் பிரிவில் இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

19/02/2021 Leave a Comment

தொற்று நோயியல் பிரிவில் 09க்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் பணி புரிகிறார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்பாக இரண்டு மூன்று வைத்தியர் மாத்திரமே இணைந்து செயற்படுகிறார்கள். ஏனையவர்களிடம் சேவைகளைப் பெறுவதில்லை. இது மிகவும் வருந்த தக்க விடயமாகும். தொற்று நோயியல் பிரிவில் இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் மேலதிகமாக ஏதாவது தேவை ஏற்படின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்குமாறும், இந்நிலையில் தொற்று நோயியல் பிரிவின் தேவைகளை நிறைவேற்றுவது அரச மற்றும் சுகாதார சேவைகளின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காற்றினார்.

Filed Under: செய்திகள்

பதவி நீக்கப்பட்ட சமலுக்கு மீண்டும் பதவி… இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் கொடுக்கப்பட்டன…

19/02/2021 Leave a Comment

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்  கீழிருந்த மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் அனைத்தும்   கடந்த 16ஆம் திகதி   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்   சமல் ராஜபக்ஷவிடமிருந்து நீக்கப்பட்டு, காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், மீண்டும் ஏற்கனவே சமலிடம் இருந்த இராஜாங்க அமைச்சு இரண்டாக்கப்பட்டு, குறித்த இரண்டு அமைச்சுக்களுக்குமான  இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (18) கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

Filed Under: செய்திகள்

மேற்கு முனையம் தொடர்பில் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை – அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் கூறுகிறது

19/02/2021 Leave a Comment

மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கின்ற போராட்டத்தில் வெற்றி பெற்றோம். துறைமுக தொழிற்சங்கங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் முறையற்று செயற்படுகிறது. இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. மேற்கு முனையம் குறித்து தொழிற்சங்கத்துடன் நாளை (20) பேச்சு வார்த்தையை முன்னெடுக்கவொள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 583
  • 584
  • 585
  • 586
  • 587
  • …
  • 592
  • Next Page »

Recent Posts

  • மின் கட்டண நிவாரணத்திற்காக மேலும் 17,213 மில்லியன் ரூபா – மேலதிக மதிப்பீட்டிற்கு நாடாளுமன்றம் அனுமதி!
  • இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மிக முக்கியமான கருத்து!
  • நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைக்கும் பிணை இல்லை!
  • வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலரைத் தாண்டியது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.