Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிவரை பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

23/02/2021 Leave a Comment

இன்று நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பரீட்சை தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பரீட்சை வினாக்கள் தொடர்பான அல்லது அது சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 1911 என்ற துரித எண்ணுக்கோ அறிவிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Filed Under: செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – வேலு குமார்

23/02/2021 Leave a Comment

“பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது சேவைகளில் உள்ள சிற்றூழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

அவர் மேலும்,

“பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களும் லயன் அறைகளில் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான சுகாதார வசதிகளும் மிக கீழ் மட்டத்திலேயே உள்ளது. அத்தொடு அவர்கள் தொடர்ச்சியாக தொழிலிலே ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். இக்காரணிகளை கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.   

தற்போது கோவிட் தடுப்பூசி வழங்களில் சிக்கலான நிலைமை தோன்றி இருக்கின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலும் முன்மொழியப்பட்ட தடுப்பூசி வழங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் கைவிடப்பட்டு இருக்கின்றது. எவ்வித திட்டமிடலும் இன்றி ஒழுங்கற்ற வகையிலே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருவர் தடுப்பூசியை பெறுவதற்கான அடிப்படை என்ன?, அதனை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை என்ன?, அதுதெடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக எவ்வித முறையான தெளிவுபடுத்தலும் இல்லாதிருக்கின்றது. தற்போது தடுப்பூசி வழங்கல் எவ்வாறான அடிப்படையில் இடம்பெறுகின்றதென்பது குழப்பமான ஒன்றாக உள்ளது.

மக்களுக்கான பொது பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதே போல அப்பொதுப்பணிகளில் உள்ள உயர் மட்டத்தவர் மட்டுமன்றி சிற்றூழியர்கள் வரை அவ்வசதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சிற்றூழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் சன நெருக்கடி மிக்க இடங்களிலேயே குடியிருக்கிறார்கள். கோவிட் தாக்கமும் அங்கே பாரிய அளவில் உள்ளது. விசேடமாக கண்டி மாநகர எல்லையில் உள்ள மஹியாவை, நித்தவளை கிராமங்கள், அதே போன்று கம்பளை மற்றும் நாவலபிட்டிய நகர எல்லையில் உள்ள குடமாக்க மற்றும் சோய்ச்சியாகல போன்ற பிரதேசங்களை குறிப்பிடலாம்.” என்று கருத்து தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை! – வாசுதேவ நாணயக்கார

23/02/2021 Leave a Comment

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு அறிவு இருந்தால் போதும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதி நியமித்துள்ள குழுவில் இருக்கும் சிலர் சாதாரண தரப் பரீட்சையில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

மாத்தறை சிறையில் 30 பேருக்கு கொரோனா

23/02/2021 Leave a Comment

மாத்தறை சிறைச்சாலையில் 30 பேருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி இவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 53 பேரினது PCR அறிக்கை நேற்று (22) கிடைக்கப்பெற்றது. இதன்படி, 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

22/02/2021 Leave a Comment

மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் : அரசாங்க தகவல் திணைக்களம் 

Filed Under: செய்திகள்

திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்! – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள்

22/02/2021 Leave a Comment

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தொகுதியை நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஊடாக திருகோணமலை துறைமுகமும் இலங்கைக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜேசிங்க கூறுவது என்ன?. திருகோணமைலை துறைமுகத்திற்கு சொந்தமான 500 ஏக்கர் காணியில் முதல் கட்டமாக 100 ஏக்கர் காணியை மூன்று கட்டங்களாக 10.2 பில்லியன் ரூபாயை செலவிட்டு 24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிக்க உள்ளதாக கூறுகிறார்.

மூலோபாய திட்டமிடல் மற்றும் செயற்திறன் முகாமைத்துவத்தை ஏற்படுத்த உள்ளனராம். இதனை செய்ய 10 மில்லியன் டொலர்களாவது செலவாகும்.

24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்து, கட்டிடத்தை நிர்மாணித்து 10 பில்லியன் ரூபாய் செலவில் கடலுக்குள் குழாய் பதிக்க உள்ளனராம்.

இதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தை நாம் இழப்பது மாத்திரமல்ல அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்.

இந்த நிறுவனத்தை இலங்கை அரசே ஏற்படுத்தவுள்ளதாக விஜேசிங்க கூறுகிறார். துறைமுக அதிகார சபையும் இந்திய எண்ணெய் நிறுவனமும் இணைந்து இந்த நிறுவனத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படியான அதிகாரத்தை யார் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. அமைச்சரவையில் இது பற்றி கலந்துரையாடப்பட்டதா? எனவும் ஆனந்த பாலித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தமிழ்வின் செய்திகள் 

Filed Under: செய்திகள்

கருத்து சுதந்திரத்திற்காக போராடும் ஸ்பெயின் மக்கள் – நகரங்கள் சில அல்லோலப்படுகின்றன.

22/02/2021 Leave a Comment

கடந்த செவாய்க்கிழமை (16) முதல் ஸ்பெயினின் பல நகரங்களில் கருத்து சுதந்திரத்திற்காக மக்கள் போராடி வருகின்றனர். 

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றுகின்ற ஸ்பெயினின் மிகப்பிரபலமான போப் இசை பாடகரான பாப்லோ ஹாசல் அந்நாட்டு முன்னாள் மன்னரான ஹுவான் கார்லோஸ் ஒரு மாஃபியா கூட்டத்தின் தலைவர் என்று கூறியதன் காரணத்தினால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆதரவாளர்களால் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பல இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் நொறுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வங்கிகளை எரிக்க முனைந்து அது முடியாமல் போக கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அவர்களை தடுக்க வந்த போலீஸ்காரர்களை நோக்கி கற்களும், போத்தல்களும் வீசப்பட்டுள்ளன. 

ஸ்பெயின் நாட்டு முன்னாள் மன்னர் ஆயுத விற்பனையால் கிடைத்த கோடிக்கணக்கான யூரோக்களை சுவிஸ் வங்கியில் வைப்பிலிட்டிருந்ததும், அவற்றை திருட்டுத்தனமாக ஸ்பெயினுக்கு கொண்டு வந்ததையும் குறித்து ஸ்பெயின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: உலகம்

இலங்கை தற்போது நிலையற்ற அரசாகிவிட்டது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

22/02/2021 Leave a Comment

2020 இன் ஆரம்ப பத்து மாதங்களின் மத்திய வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்து இக் கருத்தை முன்வைக்கின்றனர். அவ் ஆய்வுக்கு ஏற்ப 2020 ஆரம்ப பத்து மாதங்களுக்குள் மட்டும் 73 முறை அரசாங்கம் கொள்கை மாற்றங்களை செய்துள்ளது என்றும் தற்போது அவ் எண்ணிக்கை 100 தாண்டிவிட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.


ஒரு நாடு நிலையானது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் அந் நாட்டின் நிலையான கொள்கைகளாகும். பெரும்பான்மை அதிகாரம் அல்ல என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது ஆளும் அரசாங்கம் நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றத்தில் 2/3 அன்மித்த பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அரச கொள்கைகளின்போது நிலையில்லா தன்மையைக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றனர்.


அரசாங்கம் மீண்டும் மீண்டும் கொள்கை மாற்றங்களைச் செய்வது பாரதூரமானதொரு நிலைமை என்றும் காலையில் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மாலையில் மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்றும் இது நாட்டின் நிலையில்லா தன்மையை காட்டும் கண்ணாடி என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Filed Under: செய்திகள்

மறுபடி “ராஜபக்ச” என்ற பெயர் உரசிச் சென்ற நபர்களுக்குக்கூட நாங்கள் வாக்களிக்க மாட்டோம்…

21/02/2021 Leave a Comment

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு வந்தவர்களை, கொரோனா பெருந்தொற்று காரணமாக மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்துச் செல்லும்பொழுது, அந்நாட்டு அரசாங்கங்கள் தம் நாட்டு பிரஜைகளை இலவசமாகவே அழைத்து செல்கிறது. ஆனால், இலங்கை அரசாங்கம் ஒருவரிடம் 287 குவைத் தினார் (186,000 ரூபா) அறவிடப்படுகிறது.

 மறுபடி “ராஜபக்ச” என்ற பெயர் உரசிச் சென்ற நபர்களுக்குக்கூட நாங்கள் வாக்களிக்க மாட்டோம்…  

இதுகுறித்த காணொளி வெளியாகியுள்ளது…

Filed Under: செய்திகள், வீடியோ

சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவும் – சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்

21/02/2021 Leave a Comment

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த கடிதத்தில், “இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவர்களின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொள்கை எமக்குப் பெரிதும் விசனமளிக்கிறது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களில் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி உலக சுகாதார ஸ்தாபனமும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவும் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதியளித்துள்ளது.

இஸ்லாமிய மதநம்பிக்கைகளின் பிரகாரம், ஒருவர் உயிரிழந்த பின்னர் அவருக்கு வழங்கப்படும் இறுதி மரியாதையே அடக்கம் செய்வதாகும்.

எனினும் முஸ்லிம்களின் மதநம்பிக்கைக்கு முரணான வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டாயத்தகனம் என்ற கொள்கைக்கு இதுவரையில் அரசாங்கம் நியாயமான காரணங்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதன் விளைவாக நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் தொற்று பரவலாம் என்று தொற்றுநோய் வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் நீரினூடாக கொரோனா வைரஸ் பரவாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதியளிக்கும் அதேவேளை, இதுவிடயத்தில் தற்போது பின்பற்றப்படும் அடக்குமுறைக் கொள்கையை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஆதவன் செய்திகள்

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 580
  • 581
  • 582
  • 583
  • 584
  • …
  • 591
  • Next Page »

Recent Posts

  • இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு சர்வதேச வெற்றி!
  • மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகளைப் பரிந்துரைத்தார் ஜனாதிபதி!
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு – தண்டனை விபரம் பின்னர்!
  • மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திலகசிரி பெரேரா கைது!
  • சாமர சம்பத்தின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.