“அமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள்… நாட்டிற்கு சுபிட்சம்…” எனும் கருப்பொருளில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணித் தொடரின் முதலாவது பேரணி இன்று (06) புளத்சிங்ஹலவில் ஆரம்பமானது.
இதற்காக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருப்பதுடன், பேரணி ஆரம்பமாவதற்கு முன்னரே புளத்சிங்ஹல பொது விளையாட்டு மைதானம் மக்களால் நிரம்பி வழிந்தமையை காணக்கூடியதாக இருந்தது.




