சிதைந்துபோயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளமை குறித்து பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இதே போன்று இக்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக அறிவித்திருந்தன. தற்போது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி இவர்கள் போராட்டமொன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்றத்தின் பரந்த அளவிலான சீர்திருத்தங்களுக்கு எதிராகவே இவர்கள் ஆரம்பத்தில் ஒன்றிணைந்திருந்தனர்.
குறித்த திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தீவிர அனாதை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










