மிகக் குறைந்த செலவில் ஒரு தாயும் மகனும் இணைந்து ஐந்து ஆண்டுகளில் உருவாக்கிய சீன அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ (Niu Lai), அதன் தரம் குறைந்த காட்சியமைப்புகள் மற்றும் வித்தியாசமான கதைக்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பின்னர் எதிர்பாராத வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியான இத்திரைப்படம், முதல் 10 நாட்களில் சுமார் 7,700 யுவான் மட்டுமே வசூலித்து, 300க்கும் குறைவான டிக்கெட்டுகளையே விற்பனை செய்திருந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் பரவிய கேலியான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் காரணமாக, திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே அதிகரித்தது.
இதையடுத்து ஒரே நாளில் சுமார் 8.2 மில்லியன் யுவான் வசூலித்த இத்திரைப்படத்தின் மொத்த வசூல் 17.1 மில்லியன் யுவானை கடந்துள்ளது. இதனால் அதிக பட்ஜெட்டில் உருவான தி ஒடிசி மற்றும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே உள்ளிட்ட திரைப்படங்களுடன் சீனாவின் வசூல் பட்டியலில் போட்டியிடும் நிலைக்கு ‘நியூ லாய்’ வந்துள்ளது.
இத்திரைப்படத்தை இயக்குநர் சின் யுமெங் மற்றும் அவரது தாயார் சன் லிஃபாங் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் உருவான இந்தத் திரைப்படம், சமூக ஊடக விமர்சனமே எவ்வாறு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய விளம்பரமாக மாற முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாகியுள்ளது.










