தொற்று நோயியல் பிரிவில் 09க்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் பணி புரிகிறார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்பாக இரண்டு மூன்று வைத்தியர் மாத்திரமே இணைந்து செயற்படுகிறார்கள். ஏனையவர்களிடம் சேவைகளைப் பெறுவதில்லை. இது மிகவும் வருந்த தக்க விடயமாகும். தொற்று நோயியல் பிரிவில் இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் மேலதிகமாக ஏதாவது தேவை ஏற்படின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்குமாறும், இந்நிலையில் தொற்று நோயியல் பிரிவின் தேவைகளை நிறைவேற்றுவது அரச மற்றும் சுகாதார சேவைகளின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காற்றினார்.