
Virakesari Cartoon
Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அரச சுகாதாரப்பிரிவு மற்றும் தெரிவு செய்யப்பட பாதுகாப்புப் பிரிவு அங்கத்தவர்களுக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
அதன்படி, இம்மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட பிரசைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்போதே, அவ் எல்லை வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பொசி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
கொழும்புத் துறைமுகத்தின் பிகப்பெரிய முனையமான மேற்கு முனையைத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இந்தியாவின் NEWS 18 தொலைக்காட்ட்சி அலைவரிசையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கொள்கலன் நடவடிக்கைகள் இம்முனையத்தில் இடம்பெறுவதாக நாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறக்குவானை நகரில் உள்ள அரச வங்கியின் பணியாளருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வாங்கி இன்று முதல் (15) மூடப்படுகிறது.
கோடகவலை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகம் இது தொடர்பில்,
பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தது.
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்த போது மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணி முதல் இன்னிங்சில் 95.5 ஓவர்களில் மொத்தமாக 329 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்களில் 134 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்நது.
195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய அணி இதுவரை 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுஎனது கருத்து.
தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின்ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது. எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.
எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது. அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
– தினக்குரல் செய்திகள்
இவ்வாண்டில் இன்று (15) ஆரம்பமான முதலாம் தர வகுப்பில் சேர்வதற்காக தனது பாட்டியுடன் பாடசாலைக்குச் சென்ற 06 வயது சிறுவன் மீது லொறி மோதியதில் குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் சென்ற சிறுவனின் பாட்டி படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
பதுளை, அசேலபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வருண் பிரதீப் என்ற சிறுவனே இவ்வாறு அகாலமரணம் அடைந்துள்ளார். பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 இல் சேர்வதற்குச் சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மேலும் இரு வாரகாலம் செல்லும் என்றும், அதுபற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (15) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என்றும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்..
இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக சம்பள நிர்ணய சபை இந்த வார இறுதியில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
வேகமாகப் பரவிச்செல்லும் புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக நாட்டை ஒருபோதும் மூடப்பபோவதில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
‘மவ்பிம’ சிங்கள மொழிப் பத்திரிகையிடமே அவர் மேற்கண்டவாறும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நாட்டை மூடமாட்டோம். ஆனால், விரைவில் சில பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்போகிறோம். அதுபற்றிய விசேட கலந்துரையாடல் இன்று (15) சுகாதாரத் தலைவர்களுடன் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.