Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடினால் 20 வருடங்கள் சிறை…

16/02/2021 Leave a Comment

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மியன்மார் ராணுவம் தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Filed Under: உலகம்

ஷேன் வாட்ஸன், பிராவோவுக்கு பதிலாக மாற்று வீரரைச் சிந்திக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கே அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை

16/02/2021 Leave a Comment


ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸன், மே.இ.தீவுகள் வீரர் டுவைன் பிராவோ இருவருக்கும் பதிலாக வரும் ஐபிஎல் ஏலத்தில் மாற்று வீரரை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தங்கள் அணியிலிருந்து கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஸ் சாவ்லா ஆகியோரைக் கழற்றிவிட்டுள்ளது.


இதில் ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாகவும், கால் வலி காரணமாகவும் பல போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. மேலும், சுரேஷ் ரெய்னாவும் கடந்த முறை விளையாடாததால் சூப்பர் லீக் சுற்று செல்லாமல் முதல் முறையாக சிஎஸ்கே அணி வெளியேறியது.

இந்நிலையில் இந்த முறை சிஎஸ்கே அணியில் ரெய்னா, பிராவோ தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால், பிராவோ, வாட்ஸனுக்கு பதிலாக மாற்று வீரர்களைப் பற்றிச் சந்திக்க வேண்டிய நேரம் என்று கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Filed Under: ஆடுகளம்

இயலாமை ஏற்படுத்தும் ஆத்திரத்தில் அத்துமீறுவதா?

16/02/2021 Leave a Comment


பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது கல்லூரி மாணவி தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை ஐந்து நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த அராஜகமும், அடக்குமுறையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைஎதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் அயர்வற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை மத்தியஅரசு ஏற்க மறுத்து அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்று தோற்றுவிட்டது. இந்தநிலையில் போராடும் விவசாயிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் மத்திய அரசின் முயற்சியும்வெற்றி பெறவில்லை. அவர்களது தேசபக்த போராட்டத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.


சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டாதன்பர்க் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததோடு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘டூல்கிட்’ என்ற செயலியையும் பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் விவரிக்கப்பட்டிருந்தது. பெங்களூரைச்சேர்ந்த திஷா ரவி இந்த செயலியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததுதான் ஆகப் பெரிய குற்றம் என்று தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத மத்தியஅரசு பல்வேறு வழிகளில் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறது.


சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் வேளாண் மக்களின் போராட்டத்திற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராகஅரசு இந்திய அளவில் பிரபலமான சிலரை பிடித்து நிர்பந்தம் செய்து போராட்டத்திற்கு எதிரான பதிவுகளை வெளியிடச் செய்து வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றால், விவசாயிகளை ஆதரிப்பது தேசத் துரோக குற்றம் ஆகிவிடுமா?


கல்லூரியில் படிக்கும் ஒரு இளம் மாணவி மீது இவ்வளவு வன்மத்தோடு அரசு நடந்து கொள்வதும் அவருக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கிறது என்று அவதூறுபரப்புவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்தபோது குறைந்தபட்ச சட்ட நடைமுறைகள்கூட பின்பற்றப்படவில்லை. பெங்களூரு போலீசாருக்கு கூட தெரிவிக்காமல் சம்மன் இல்லாமல் அவரை கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை. மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபமும்,அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்ச மனித உரிமைகளைக் கூட பின்பற்றாமல் அரசை எதிர்ப்பவர்களை வேட்டையாட முயல்வது ஜனநாயகத்தை முற்றிலும் இழிவுபடுத்துவதாகும். திஷா ரவி கைதைக் கண்டித்து ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும்.
– தீக்கதிர் 

Filed Under: உலகம்

மார்ச் மாதம் முதல் கடற்படையினரின் ஒருபகுதி சம்பளம் துண்டிக்கப்படும்…

16/02/2021 Leave a Comment


எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஊதியத்தில் குறித்த தொகை துண்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடற்படை திகாரிகளிடம் 1500 ரூபாவும், கடற்படை சிப்பாய்களிடம் 700 ரூபாவுமே இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளது.


அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக பாடசாலை கல்வி வேலைத்திட்டத்திற்கு இத்தொகை ஒதுக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து கடற்படை அதிகாரிகளும், சிப்பாய்களும் “தாம் தற்போதும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். அதற்கு மேலதிகமாக பிள்ளைகளின் மேலதிக வகுப்புக்கும், online கல்விக்கும் கிடைக்கின்ற சம்பளத்திலேயே செலவழிக்கிறோம். தவிர, பிள்ளைகளின் பாடசாலை விடயங்களுக்கும் பணம் செலுத்துகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.

Filed Under: செய்திகள்

விவசாயிகளின் கைகளுக்குத் துப்பாக்கி…

16/02/2021 Leave a Comment

குரங்கு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்பு விவசாய நிலங்களில் அதிகரித்து உள்ளதால், வேளாண்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப் பாத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், 05 ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருத்தவர்களுக்கே துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இனிமேல் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருப்பவருக்கும் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார். 

Filed Under: செய்திகள்

சாமிமலை டீசைட் தோட்டத்தை சேர்ந்த 3 பிரிவுகளில் பணிபுரியும் 300 தொழிலாளர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில்…

16/02/2021 Leave a Comment

மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை டீசைட் தோட்டத்தை சேர்ந்த 3 பிரிவுகளில் பணிபுரியும் 300 தொழிலாளர்கள் இன்று (16) பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டு உள்ளனர்.

தோட்ட நிர்வாக கெடுபிடி காரணமாகவே இந்த பணி பகிஸ்கரிப்பு இடம்பெறுகின்றது. 

தொழிலாளர்களிடம் 18 கிலோ பச்சை கொழுந்தை பறித்தாலும் முழுமையான வேதனம் வழங்கப்படுவதில்லை  எனவும் கடந்த 11 ஆம் திகதி முதல் இவ்வாறு கொழுந்து பறித்தவர்களுக்கு பாதி வேதனம் மட்டுமே தோட்ட நிர்வாகம் வழங்கும் என கூறியதை தொடர்ந்தே இந்த பகிஸ்கரிப்பை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த தொழிலாளர்களின் கோரிக்கையானது தங்கள் பணிபுரியும் தினத்தில் தாங்கள் பறிக்கும் 16 கிலோவிற்கு நாளாந்த வேதனத்தையும் அதற்கு மேல் பறிக்கும் பச்சை கொழுந்திற்கு 40 ரூபா வீதம் வழங்க வேண்டும் எனவும் கொழுந்துகள் 3 தரம் நிருவையின் போது தட்டுக்காக வெட்டப்படும் 4 கிலோ வீதம் 12 கிலோ வெட்டுவதை தவிர்த்து 6 கிலோ மட்டும் வெட்ட வேண்டும் எனவும் தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளை பாதுகாக்க உரம் இடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்து 300 தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு உள்ளனர்.

Filed Under: செய்திகள்

எந்தவொரு அரசாங்கமும் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள கரிசனையை சேவையாற்றுவதில் காண்பிக்கவில்லை – எம்.சிவஞானம்

16/02/2021 Leave a Comment

ஆட்சிப்பீடமேறிய எந்தவொரு அரசாங்கமும்   மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள கரிசனையை சேவையாற்றுவதில் காண்பிக்கவில்லை    என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்…

“மலையக மக்களின் வீட்டுத் தேவைகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. பெருந்தோட்டங்களில் பக்கம் அரசின் பார்வை உரியவாறு விழுவதாக இல்லை. தோட்டத்தில் உள்ள லயன் வீடுகளுக்குக் கூட உறுதியை வழங்க ஆட்சியாளர்கள் பின்னடித்து வருகின்றனர்.” என்றார்.

காலங்காலமாக ஆளும்தரப்புடன் (நல்லாட்சியைத் தவிர) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

ஏ9 வீதியை மறித்து போராடிய கரந்தாய் மக்கள்!

16/02/2021 Leave a Comment


கிளிநொச்சி – பளை, கரந்தாய் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபையால் உரிமை கோரப்பட்ட நிலையில் மக்களிடம் கையளிக்க அறிவுறுத்தப்பட்ட காணியில் தற்காலிகமாக வசித்த மக்களின் கொட்டகைகளை குறித்த சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் உழவியந்திரம் மூலம் இடித்து அகற்றி, அங்கிருந்தோரை வெளியேற்றியுள்ளனர்.

நேற்று (15) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை, கரந்தாய் கிராமத்தில் 1976ம் ஆண்டு மக்கள் குடியேறிய இருந்தனர். அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போர் நிறைவடைந்ததன் பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியிருந்தனர்.


அவ்வாறு குடியேறியிருந்த காணியை தமக்குரியது என தெரிவித்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர், 2015ம் ஆண்டு மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.


இதனையடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதன் பயனாக மக்களுடைய காணிகளை இரு வாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இந்நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் தமது தீர்வினை தாமே பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது காணிகளிற்குள் உள்நுளைந்து கடந்த இரண்டு மாதமாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.


இன்றைய அங்கு சென்ற தென்னை பயிர்ச் செய்கை சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் மக்களின் தற்காலிக கொட்டகைகளை உழவியந்திரம் மூலம் இடித்தழித்து, மக்களை வெளியேற்றினர்.


இவ்வாறு இடிக்கப்பட்ட கொட்டகைகளை மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்களை ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து பாதிக்கப்பட்டோர் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டத. அதன்பின்னர் குறித்த இடத்திற்கு சென்ற பளை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.


கலந்துரையாடலின்போது தென்னை பயிர் செய்கை சபையினரால் அழிக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் அமைத்துத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக மக்களுக்கு பொலிஸார் வாக்குறுதி வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.


இதேவேளை இந்த காணி தொடர்பில் நீதிமன்ற வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

– உதயன் செய்திகள் 

Filed Under: செய்திகள்

திண்டாட்டத்தில் பண்டிகை காலம்… அரிசியின் விலை கூட்டப்படலாம்…

16/02/2021 Leave a Comment

பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளைப்போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் இதனை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Filed Under: செய்திகள்

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை சாத்தியம்… கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்கும்…

16/02/2021 Leave a Comment

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வானிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை…

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம் வரையானமற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 587
  • 588
  • 589
  • 590
  • 591
  • 592
  • Next Page »

Recent Posts

  • மின் கட்டண நிவாரணத்திற்காக மேலும் 17,213 மில்லியன் ரூபா – மேலதிக மதிப்பீட்டிற்கு நாடாளுமன்றம் அனுமதி!
  • இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மிக முக்கியமான கருத்து!
  • நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைக்கும் பிணை இல்லை!
  • வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலரைத் தாண்டியது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.